'சிறை பிடிக்கப்பட்டிருந்த மைத்திரி, மஹிந்தவின் புரட்சியினால் மீட்கப்பட்டார்'
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஐக்கிய தேசியக் கட்சியின் பிடியிலிருந்து மீட்டுள்ளதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சியின் ஊடாக, ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து மீட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தற்போது அபாயராமயவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது வரை காலமும் மைத்திரிபால சிறிசேனவை ஐக்கிய தேசியக் கட்சி சிறைபிடித்து வைத்திருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார

Post a Comment