Header Ads



8 ஆசனங்களை வெற்றிகொள்வது உறுதியாகிவிட்டது - ஹக்கீம்

தேசியக் கட்சி கண்டி மாவட்டத்தில் 08 ஆசனங்களை வெற்றி கொள்வது உறுதியாகிவிட்டது என்றும் இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்வதற்காக செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சரும், கண்டி மாவட்ட ஐ.தே.க வேட்பாளருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கண்டி கட்டுகஸ்தோட்டையில் அமைந்துள்ள அமைச்சர் ஹக்கீமின் தேர்தல் பிரச்சார அலுவலகத்தில் இன்று (30) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறுகையில்,

ஜனவரி 08ஆமம் திகதி இந்த இந்த நாட்டில் ஏற்பட்ட நல்லாட்சியை நோக்கிய புரட்சியை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்வதே எமது நோக்கம். 100நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நாம் நல்லாட்சியை நிரூபித்துள்ளோம். இதனால் ஐக்கிய தேசியக் கட்சியின் மீது இந்நாட்டு மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தக் கட்சியை ஆட்சியில் அமர்த்துவதற்கு மக்கள் தீர்மானித்துவிட்டனர்.

கண்டி மாவட்டம் ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டையாகும். இந்த மாவட்டத்தை வெற்றி கொண்டால் அனைத்து மாவட்டங்களையும் வெற்றிகொள்வது மிக இலகுவாகும்.

இந்தத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி கண்டி மாவட்டத்தில் 08 ஆசனங்களை வெற்றி கொள்வது உறுதி செய்யபட்டுவிட்டது. இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்காக நாம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

வரலாற்றில் என்றுமில்லாதவாறு பாரிய அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதனால் கண்டி மாவட்டம் மிகப்பெரும் பயனைப் பெறும். ஆகவே, நம் அனவரும் ஒன்றிணைந்து ஐக்கிய தேசியக் கட்சிய வெற்றி பெறச் செய்து எமது எதிர்காலத்தை வளப்படுத்துவோம் என்றார்.

5 comments:

  1. ஆசனங்களுக்கு நீங்கள் காட்டும் அக்கரையில் பாதியளவாவது மக்கள் நலணிலும் காட்டினால் உங்களை யாராலும் சாய்க்க முடியாது தலைவா

    ReplyDelete
  2. இப்போது நன்றாக விழங்குதுதானே இவர்கள் ஆசைப்பட்டு அலைந்து திரிவதெல்லாம் மக்களுக்கோ நமது சமூகத்திற்கோ சேவை செய்வதற்கில்லை மாறாக அவர்களின் கட்சிகளில் இருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கைகளை காண்பித்து (இவர்கள் அடிக்கடி சொல்லும்) பேரம் பேசி இவர்களும் இவர்களை சார்ந்தவர்களும் சுகபோகம் அனுபவிக்கவும் கோடிக்கணக்கான ரூபாய்களை சுறுட்டிக்கொள்ளவும்தான்

    மக்கள் கொடுகின்ற வாக்குப் பிச்சையிலேயே வாழ்க்கை நடாத்திக்கொண்டும் ஆனால் அதே மக்களை மடயர்களாக்கிக்கொண்டும் சுகபோக வாழ்க்கை வாழும் இவர்கள் இந்த உலக வாழ்க்கையில் இருந்து இறைவனின் சந்நிதானத்திற்கு வந்தாகவே வேண்டும் என்பதை மறந்துவிட்டார்களோ என்னவோ

    ReplyDelete
  3. இப்போது நன்றாக விழங்குதுதானே இவர்கள் ஆசைப்பட்டு அலைந்து திரிவதெல்லாம் மக்களுக்கோ நமது சமூகத்திற்கோ சேவை செய்வதற்கில்லை மாறாக அவர்களின் கட்சிகளில் இருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கைகளை காண்பித்து (இவர்கள் அடிக்கடி சொல்லும்) பேரம் பேசி இவர்களும் இவர்களை சார்ந்தவர்களும் சுகபோகம் அனுபவிக்கவும் கோடிக்கணக்கான ரூபாய்களை சுறுட்டிக்கொள்ளவும்தான்

    மக்கள் கொடுகின்ற வாக்குப் பிச்சையிலேயே வாழ்க்கை நடாத்திக்கொண்டும் ஆனால் அதே மக்களை மடயர்களாக்கிக்கொண்டும் சுகபோக வாழ்க்கை வாழும் இவர்கள் இந்த உலக வாழ்க்கையில் இருந்து இறைவனின் சந்நிதானத்திற்கு வந்தாகவே வேண்டும் என்பதை மறந்துவிட்டார்களோ என்னவோ

    ReplyDelete
  4. அன்று மக்களின் தேவை மன்னனின் சேவை !! இன்று மன்னனின் தேவை மக்களின் சேவை.. !!

    ReplyDelete

Powered by Blogger.