Header Ads



தற்கொலை செய்துகொண்ட மைத்திரி, அரசியல் அநாதையானார்..!!

-நஜீப் பின் கபூர்-

கிணறு வெட்டப் பூதம் பிசாசு -பிறந்த கதையா அல்லது ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி அப்புறம் நீ யாரடா நான் யாரடா! என்ற கதையோ தெரியவில்லை.

தான் தோற்றுப் போயிருந்தால் என்னை ஆறடி ஆழத்திற்குக் குழி தோண்டிப் புதைத்திருப்பார்கள் என்று கூவிக் கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரி தனக்குத்தானே அரசியல் ரீதியாக குழிவெட்டி 18 அடி ஆழத்துக்குள் சென்றிருக்கின்றார் என்று தான் தற்போது தெரிகின்றது.

மைத்திரி பற்றிய இருந்த இமேஜ தற்போது அடியோடு வெட்டிச் சாய்க்கப்பட்டு விட்டது. தன்னை ஒரு முதிர்ச்சியான அரசியல்வாதி என்று அவரே அவருக்குச் சான்று பகர்ந்து கொண்டாலும் யாதார்த்தத்தில் அப்படி இல்லை என்பது தற்போது அவரது நடவடிக்கையால் முடிவாகி இருக்கின்றது.

இந்த நாட்டு; வரலாற்றில் மைத்திரி போன்ற ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதி கிடையாது- பிறக்கவில்லை என்ற அளவுக்கு அவரது அரசியல் தீர்மானம் அமைந்திருக்கின்றது.

மஹிந்தவுக்கு வேட்பு மனுக் கொடுத்தது பற்றி விமர்சனங்களை செய்வதற்கு எமக்கோ ஏனைய கட்சிகளுக்கோ உரிமை கிடையாது. அது அவர்களது உள்வீட்டு விவகாரம். என்றாலும் நாட்டில் ஜனாதிபதி இது விடயத்தில் நடந்து கொண்ட அணுகுமுறை, அவரை தேர்தலில் ஆதாரித்து நின்ற ஐக்கிய தேசிய மற்றும் சிறு கட்சிகள்-சிறுபான்மைக் குழுக்கள் இதற்காக முன்னின்று உழைத்த வெகு ஜன இயக்கங்களைப் பேரதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது.

கடந்த வெள்ளிவரை இருந்த ஜனாதிபதி இன்று நாட்டில் காணாமல் போயிருக்கின்றார். அத்துடன் மைத்திரி இன்று அரசியல் ரீதியில் அநாதையாகி இருக்கின்றார். ராஜபக்ஷக்களின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இவருடன் வெளியேறி வந்த சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்களும், வெற்றி பெற்று பதவிக்கு வந்த பின்னர் இவருடன் இணைந்து கொண்ட பலரும், ஜனாதிபதி மைத்திரியிடம் புள்ளிகளைச் சேகரித்துக் கொள்ள  ராஜபக்ஷக்கள் மீது கடுமையான விமர்சனங்களைச் செய்தவர்களும்-அப்பச்சிகளும்! இன்று திகைத்துப்போய் -நிர்க்கதிக்கு ஆளாகி நிற்கின்றார்கள்.

மஹிந்தவுடைய அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக பாரிய விமர்சனங்கள் இருந்தாலும், மைத்திரி சுதந்திரக் கட்சித் தலைமைப் பதவியை மஹிந்தவிடமிருந்து பிடுங்கி எடுத்துக் கொண்ட நிலையிலும், உண்மையில் கட்சியின் 90 சதவீதமான ஆதரவு மஹிந்த பக்கமே இருந்தது என்பதனை மைத்திரி உணர்ந்து கொண்டார். எமது கணிப்புப்படி மஹிந்த வேறாகவும் மைத்திரி வேறாகவும் தேர்தலில் களமிறங்கி இருந்தால்  மிகப் பெரும்பான்மையான சுதந்திரக் கட்சி வாக்குகளை மஹிந்தவே பெறுவார். 

மஹிந்த 70-80 முதல்  ஆசனங்களைப் பெறும் போது மைத்திரிக்கு  15-25 க்கும் இடையிலான ஆசனங்களே கிடைக்கும், என்றாலும் மைத்திரி (ஆதரவு) தேசிய அரசங்கம் என்ற சிந்தனையை நடைமுறைப்படுத்த அவருக்கு இது போதுமான தொகையாக இருந்திருக்கும் என்பது எமது கணிப்பு.

மைத்திரி எடுத்த இந்த அரசியல் தீர்மான அவரது அரசியல் இருப்பையே தற்போது கேள்விக்குறியாக்கி இருக்கின்றது.

சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் நமது நாட்டில் முன்னாள் தேசாதிபதிகள் என்ற நிலை! மிஞ்சிப்போனால் ஒரு விஜேதுங்ஹவாகத்தான் மஹிந்த முன்னால் எதிர் காலத்தில் மைத்திரி அரசியல் பணிகளை மேற் கொள்ள முடியும் என்பது கடடுரையாளன் கருத்து.

மக்களால் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்ட மஹிந்தவுக்கு மைத்திரியை இப்படி ஆட்டிப்படைக்க முடிகின்றது என்றால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் இறக்கைகள் வெட்டப்பட்டு பிரதமர் அதிகரம் நாடாளுமன்றத்திற்குப் போயிருக்கின்ற இன்றைய நிலையில் மஹிந்த பிரதமரானால் நடக்கப்போவது என்ன என்பதுதான் இப்போது உலகமும் நாடும் ஆவலுடன் எதிர் பார்த்திருக்கின்ற விவகாரம்.

ரணில் என்னதான் மஹிந்தவுக்கு சவால் விடுத்து வீரம் பேசினாலும் வருகின்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் ஆட்சிக்கு வருவதற்கு இன்னும் நிறையவே காரியம் பண்ண வேண்டி இருக்கின்றது.

இத்தனையும் நடந்தும் இது பற்றி பகிரங்கமாக மக்கள்-ஊடகங்கள் முன் வந்து கூற முதுகில்லாமல் இருக்கின்றார் ஜனாதிபதி மைத்திரி என்பதில், அவர் திரிசங்கு நிலை-ஆளுமை நாட்டுக்குப் புரிகின்றது.

தனது நெருக்கடி நிலை குறித்து (ஸ்ரீ.ல.சு.கட்சியைப் பாதுகாக்கின்ற விடயத்தில்) அமைச்சர் ராஜதவிடம் மைத்திரி ஒப்பாறி வைத்தே அவரை ஒரு வழிக்குக் கொண்டு வந்து சமாளித்திருக்கின்றார். இப்போது ராஜித தேசியப் பட்டியல் மகன் நேரடியாகக் களத்தில் என்று ஒரு தகவல் சொல்கின்றது.

குடும்ப ஆட்சி, குற்றவாளிகளுக்குத் தண்டனை அதிகாரத் துஸ்பிரயேகம் செய்தவர்களுக்குத் சிறைக்கூடம் என்ற கதைகள் எல்லாம் இப்போது வெறும் அரசில் நகைச்சுவைகள்! 

மைத்திரியின் அரசியல் பச்சோந்தித் தனம்தான் நம்ம நாட்டு அரசியல் கலாச்சரம் என்பது மீண்டும் உறுதியாகி இருக்கின்றது.

3 comments:

  1. அத்தனையும் உன்மை மஹிந்த எனக்கு குழிதோன்டுகின்ரார் என்ரு சொன்னவரே அவருக்கான குழியைதோன்டியிருக்கின்ரார் மஹிந்த சொன்ன துரோகியை விட பெரிய துரோகியாக மைதிரி தற்போது மக்கள் மத்தியிள் கானப்படுகின்ர்

    ReplyDelete
  2. He declared that he will not seek a second term and he could have used this declaration to take strong decisions that are needed for good governance. He now
    looks he didn't mean what he said to the people. Deliberately My3 says something
    and Rajitha something else ! In the political circles , the talk is about Mahinda got the
    nod from My3 but My3 is only issuing double meaning statements without clearly
    stating his position on Mahinda ! And so far Ranil has not said anything about this
    either. So, all of them are playing games with the poor general public, thinking that
    they are all smart players ! People must teach all these fellows a very good lesson
    in this election.

    ReplyDelete
  3. பதவி ஆசையும் அதிகார (த்தை தக்க வைத்துக்கொள்ள எதைவேண்டுமானாலும் துணிந்து செய்யும்) வெறியும் இல்லாத ஒரு மனிதனை இப்படி எல்லோரும் சேர்ந்து நெருக்கடி கொடுத்தால் அவரும் என்னதான் செய்யமுடியும்.

    ஒருபுறம் கட்சியைக் கட்டிக்காப்பாற்றவேண்டிய பொறுப்பு; மறுபுறம் தன்னை நம்பி இறங்கியவர்களை காப்பாற்ற வேண்டிய தேவை; இன்னொரு முனையில் ரணில் எனும் சாமர்த்திய நரியின் வியூகங்களை எதிர்கொள்ளவேண்டிய நிலைமை. இப்படி பலமுனைகளிலிருந்தும் தாக்கினால் ஒருவர் (என்னதான் சிறந்த தலைவராக இருந்தாலும்) எதைத்தான் தெளிவாகச் செய்யமுடியும்...?

    ஒரு காலத்தில் ராஜாவாக இருந்த வெட்கம் மானமில்லாத மஹிந்த இன்று தொழுநோய் பீடித்த பிச்சைக்காரனைப் போலாகி காலைக் கையைப் பிடித்து அழுது தேம்பி ஒரு வேட்பாளராகி விட்டாலும் நல்லாட்சியை விரும்பும் மக்களின் கையில்தான் எதிர்காலம் இன்னும் இருக்கின்றது.

    வாக்குகளை வீணாக்காமல் பயன்படுத்தி நமது சாணக்கியத்தை காண்பித்தால் இந்தக் குள்ள நரிகள் எப்படி வருவார்கள்..?

    ReplyDelete

Powered by Blogger.