இந்தியாவுக்கு வெட்கம்
இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில், வீட்டில் கழிப்பறை கட்டித் தருவதற்கு பெற்றோர் மறுத்ததால் பதினேழு வயது யுவதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தாம் சேமித்துவரும் பணம் மகளின் திருமணத்துக்குத் தேவை எனக் கருதி பெற்றோர் கழிப்பறை கட்ட மறுத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
யுவதி உயிரிழந்த சம்பவம் பற்றி சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிட்டுள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர் ஒருவர், இந்த சம்பவத்தால் மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும் என்றும், கழிப்பறை கட்டுவதற்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கழிப்பறை துப்புரவு வசதி நாடெங்கிலும் ஏற்படுத்தப்படுவதை தனது அரசின் முக்கியக் கொள்கையாக அறிவித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
இந்தியாவின் 120 கோடி ஜனத்தொகையில் கிட்டத்தட்ட பாதிப்பேருக்கு கழிப்பறை வசதி இல்லை. bbc

Post a Comment