சுதந்திர கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து, ஐக்கிய தேசிய கட்சிக்கு தொலைபேசி அழைப்புக்கள்
ஜனவரி 8 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைவை தோல்வியடைய செய்ய ஒன்றிணைந்த சக்திகள் தற்சமயம் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைவதாக அமைச்சர் லக்ஷ்மண் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்
மஹிந்த ராஜபக்ச என்பவர் காலவதியான பொருள். அவரால் நாட்டுக்கு வழங்க கூடிய ஒன்றும் இல்லை.
ஜனவரி 8 ஆம் திகதி அவரை தோல்வியடைய ஒன்றிணைந்த அனைவரும் இன்று ஐக்கிய தேசிய கட்சியுடன் கைகோர்க்க தீர்மானித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டு ஐக்கிய தேசிய கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட தயார் என கூறுவதாக அமைச்சர் லக்ஷ்மண் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

Post a Comment