Header Ads



மிகப்பெரிய துரோகி மைத்திரி, உண்மையை வெளிப்படுத்த இன்னமும் சந்தர்ப்பம் உண்டு..!


நாடு சுதந்திரமடைந்ததன் பின்னரான மிகப் பெரிய துரோகத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுள்ளரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பிரஜைகள் சக்தி அமைப்பின் அழைப்பாளர் காமினி வியான்கொட தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில், பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு , ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதியளித்திருந்தால் அது சுதந்திரத்தின் பின்னரான மிகப் பெரிய துரோகச் செயலாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்தவிற்கு வேட்பு மனு வழங்கப்பட்டதா இல்லையா என்பதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாக தெரிவிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவின் மௌனம் இந்த தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், உண்மையை வெளிப்படுத்த ஜனாதிபதிக்கு இன்னமும் சந்தர்ப்பம் உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.