சந்திரிக்கா தயாரித்த, வேட்பு மனு பட்டியல் நிராகரிக்கப்பட்டது
கம்பஹா மாவட்ட வேட்பு மனுவில் மாற்றம் செய்யப்பட்டதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். கண்டி மல்வத்து பீடாதி திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலுக்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஒத்துழைப்புடன் வேட்பு மனு தயாரிக்கப்பட்டது. இந்த வேட்பு மனுவை கட்சியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த உள்ளிட்ட சிலர் மாற்றியமைத்துள்ளனர்.
சந்திரிக்காவுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காக நல்லதொரு குழுவினை பட்டியல்படுத்தியிருந்தோம். அந்த வேட்பு மனுப் பெயர்ப் பட்டியல் முற்று முழுதாக மாற்றியமைக்கப்பட்டது. சுசில் பிரேமஜயந்த இந்தப் பெயர்ப்பட்டியலை மாற்றியமைத்தார்.
அந்தப் பட்டியலில் கள்வர்களின் பெயர்கள் இடப்பட்டுள்ளன. கள்வர்களின் மனைவியரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதனால் இந்தப் பட்டியில் இணைந்து கொண்டு எங்களினால் போட்டியிட முடியாது.
பிரதமருடன் பேசி தனியான ஓர் குழுவாக போட்டியிடத் தீர்மானித்தோம். நாட்டை முன்னோக்கி நகர்த்துவதே எமது எதிர்பார்ப்பாகும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுபவர்கள் அதிகமானவர்கள் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் என அர்ஜூன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment