Header Ads



"ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெறுவதற்காக, மைத்திரி மேற்கொண்ட தீர்மானம்"

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்பு மனு வழங்கியது, ஐக்கிய தேசிய கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்கென அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மகரகமயில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

எதிர்வரும் 18ஆம் திகதி பெரும்பான்மை கொண்ட ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்குவோம் என்பதனை மக்களுக்கு நான் முதலில் நினைவூட்ட விரும்பிகின்றேன்.

மோசடிக்காரன் ஏமாற்றுக்காரன், போதைப்பொருள் வியாபாரி போன்றோரை உள்ளடக்கிய அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்புமாறு கூறி கடந்த ஜனவரி மாதம் 08ஆம் திகதி மக்கள் எடுத்த தீர்மானம் எங்கள் பொது வேட்பாளர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வெற்றி பெற செய்வது.

இத்தீர்மானத்திற்கமைய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும், ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் இம்முறை நல்லதொரு போட்டியை நாங்கள் எதிர்பார்த்தோம்.

மஹிந்த ராஜபக்சவுக்கு புண்ணியம் கிடைக்க வேண்டும். அவரால் இன்று எங்களுக்கு அந்த போட்டியும் இல்லாமல் போய்விட்டது.

அன்று இருந்த திருடர் கூட்டம் போதைப் பொருள் கடத்தல்காரர்கள், ஊழல் மோசடிக்கார கூட்டங்கள் என அனைவரும் இன்று வேட்புமனு பட்டியலில் இடம்பிடித்து விட்டார்கள்.

மக்கள் நிராகரித்த ஒரே ஒரு அரசியல் தலைவரான மஹிந்த ராஜபக்ச, குறித்த கூட்டங்களுக்கு தலைமை தாங்குவதோடு இம்முறை தேர்தலில் போட்டியிடுவதனால் ஐக்கிய தேசிய கட்சி மூன்றில் இரண்டு அதிகாரத்தை பெறும்.

எனவே நான் மஹிந்த ராஜபக்சவுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி சொல்ல விரும்புகின்றேன். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகவும் சிறப்பானதொரு தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற வேண்டுமாயின், கூட்டணியில் மஹிந்த போட்டியிட வேண்டும் என ஜனாதிபதி சிறப்பானதொரு தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார் என்பதனை நான் மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியுடன் கூற விரும்புகின்றேன் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.