Header Ads



எங்கள் கட்சியில் குடும்ப அரசியல் கிடையாது - சரத் பொன்சேகாவின் புதல்வி

ஜனநாயகக் கட்சியில் குடும்ப அரசியல் எதுவும் கிடையாது என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகாவின் சிரேஸ்ட புதல்வி அப்ஸரா பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தமது தந்தையும் தாயும் மட்டுமே தேர்தலில் போட்டியிடுவதாகத் தெரிவித்துள்ளார்.

தமது தந்தைக்கு ஆதரவளிக்கும் நோக்கில் தாய் போட்டியிடுவதாகத் தெரிவித்துள்ளார்.

இருவரும் இணைந்து போட்டியிடும் போது மிகவும் வலுவாக நல்லாட்சிக்கு எதிராக போராடுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயகக் கட்சியில் குடும்ப ஆட்சிக்கு எவ்வித இடமும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் சரத் பொன்சேகாவும், கம்பஹா மாவட்டத்தில் அனோமா பொன்சேகாவும் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட உள்ளனர்.

No comments

Powered by Blogger.