Header Ads



இப்தாரில் சந்திரிக்கா பங்கேற்பு, பள்ளிவாசலில் அரசியல் பேச முடியாது என்றார் (படங்கள்)

-அஸ்ரப் ஏ சமத்-

கொழும்பு 7 உள்ள தெவட்டகா பள்ளிவாசலில் இப்தாா் நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க கலந்து சிறப்பித்தாா்.  இந் நிகழ்வில் அமைச்சா்கள் ஏ.எச்.எம். பௌசி, குணவா்த்தன மற்றும் அசாத் சாலி, அலவி மௌலானா ஆகியோறும் கலந்து சிறப்பித்தனா். இந்நிகழ்வினை சந்திரிகாவின் இணைப்பாளா் கபீா் ஹாஜியாா் ஒழுங்கு படுத்தியிருந்தாா்.

வருகை தந்த முன்னாள் ஜனாதிபதியிடம் தற்பொழுது முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுக்கு தோ்தலில் போட்டியிடுவதற்கு ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னனியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதே உங்களது கருத்து என்ன?

நீங்களும் கம்பஹாவில் போட்டியிடுவீா்களா ? என கேள்விகைளை தொடுத்தேன்.

இது பள்ளிவாசல் இங்கு அரசியல் பேச முடியாது   எனச் சொன்னாா். எனது காலத்தில் முஸ்லீம்கள் தமது கடமைகளை சரியாக செய்வதற்கு பள்ளிவாசல்கள் அமைத்து வாழ்வதற்கு எனது காலத்தில் எவ்வித தடையும் இருக்க வில்லை. அந்த யுகம்  இனி இல்லை. . எனவும் தெரிவித்தாா்.





No comments

Powered by Blogger.