Header Ads



நிந்தவூரில் திடீரென முளைத்துள்ள தடைகள்!...


-மு.இ.உமர் அலி -

கடந்த ஆட்சிக்காலத்தில் முஸ்லீம் காங்கிரஸ்   அரசுடன் பங்காளியாக இருந்ததன் பயனாக  நிந்தவூர் பிரதேசத்தில் பல கோடி ரூபா பெறுமதியான வீதி அபிவிருத்தி ,நீர்ப்பாசனம்  போன்ற இன்னோரன்ன உட்கட்டமைப்பு நடவடிகைகள்  மேற்கொள்ளப்பட்டன.வீதிகளை  அபிவிருத்தி செய்ய கம நெகும  திட்டத்தின் கீழ் 50  மில்லியன்  ரூபாயும் பலாத் நெகும திட்டத்தின்கீழ்   320  ரூபாயும் ஒதிக்கீடு செய்யப்பட்டிருந்தன.

அந்தவகையில்  வீதிகள் புனர்மைப்பு செய்யப்பட்ட  பின்னர்,  ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த  நீர்வழங்கல்   அதிகாரசபையின் குழாய்களினை கட்டுப்படுத்தும் திருகிகள் உள்ள பாரிய கொன்கிரீட்டுக் குழிகள்  (Control valve Chambar Box) வீதிகளைவிட  உயரத்தில் அதிகரித்துக்காணப்படுகின்றன.ஓரிரு இடத்தில் மட்டுமல்ல பல வீதிகளில் பல இடங்களின் இந்நிலை  காணப்படுகின்றது.

வீதிகளின்  இடைநடுவே   கிட்டத்தட்ட 4 x4   அடி அளவிலான மேடை ஒன்று தோன்றுகின்றது. இதனால் புதிதாக அமைக்கப்பட்ட பாதைகளின் பயனை மக்கள் அடைய முடியாமல் உள்ளனர்.  

தெரு விளக்குகள்  இல்லாத இடங்களில் இந்த திடீர் தடைகளின் காரணமாக  வீதி விபத்துக்களும் நடைபெறுகின்றன.இரண்டு வாகனங்கள் ஒன்றை ஒன்று விலக்கிக்கொண்டோ அல்லது முந்திக்கொண்டோ    செல்ல முடியாமலும் உள்ளது.

சம்பந்தப்பட்ட  நிறுவனங்கள்  இந்த  பொருத்தமற்ற கட்டமைப்பினை காலதாமதமின்றி திருத்துவதோடு  தங்களுக்கு  தடைகளற்ற வீதிகளை அமைத்துத்தர வேண்டுமென்று பொதுமக்களால் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

No comments

Powered by Blogger.