றிசாத் பதியுதீன் கொழும்பிலா, வன்னியிலா..? 9 ஆம் திகதி இறுதித் தீர்மானம், கிழக்கில் தனித்துப் போட்டி
அகில மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் அல்லது வன்னி மாவட்டத்திலா போட்டியிடுவது என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு நம்பரமான வட்டாரங்கலிருந்து அறியவருகிறது.
எதிர்வரும் 9 ஆம் திகதி இதுகுறித்த இறுதித் தீர்மானத்தை றிசாத் பதியுதீன் மேற்கொள்வரரெனவும், இதுபற்றிய கலந்துரையாடல்கள் தொடர்ந்தும் நடைபெறுவதாகவும் அறியக்கிடைத்தது.
மேலும் அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவது உறுதி செய்யபட்டுள்ளது. மாவட்டத்தில் செல்வாக்குப் பெற்றவர்களை களத்தில் இறக்கி, ஒரு ஆசனத்தை பெற்றுக்கொள்ள முடியுமென்ற நம்பிக்கை இருப்பதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் உறுதிபட தெரிவித்தன.
அத்துடன் கண்டி மாவட்ட முஸ்லிம்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமது பிரதேசங்களில் வேட்பாளர்களை நிறுத்துமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவதாகவும், அதனடிப்படையில் அங்கு தனித்துப் போட்டியிட உத்தேசித்திருப்பதாகவும், எனினும் இதுவரை எத்தகைய இறுதி முடிவுகளும் மேற்கொள்ப்படவில்லை எனவும் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு வருகிறது.

Post a Comment