Header Ads



ஐக்கிய தேசிய கட்சியுடன் முதற்கட்ட பேச்சு நிறைவு, 2 கட்ட பேச்சும் வெற்றிபெற்றால் புரிந்துணர்வு ஒப்பந்தம்


ஐக்கிய தேசியக் கட்சிக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கும் இடையிலான முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்துள்ளது.

கட்சித் தலைவர் றிசாத் பதியுதீன், அமீர் அலி, ஹமீட் ஆகியோர் ரணில், மலிக் ஆகியோர் அடங்கிய ஐக்கிய தேசியக் கட்சி உயர்பீடத்துடன் முக்கி பேச்சுக்கக்கள் நடைபெற்றுள்ளது.

இதன்போது முஸ்லிம் விவகாரங்கள் ஆசனப் பங்கீடு, வேட்பாளர் ஒதுக்கீடு, வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்,  கண்டியில் ஆண்கள் முஸ்லிம் பாடசாலை,  மலையக முஸ்லிம்களுக்கு நடைபெறும் பாரபட்சம், கிழக்கு மாகாண முஸ்லிம்களின் நீண்டநாட் கோரிக்கைகள், தமிழ் அரசியல் கைதிழகள் விவகாரம், கொலன்னாவையில் முஸ்லிம் பாடசாலை உள்ளிட்ட பல விடங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளன.

இந்த கோரிக்கைகளை ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழு நன்கு செவிமடுத்துள்ளது. மீண்டும் மிகவிரைவில் ரணில் தலைமையிலான குழுவை அகில மக்கள் காங்கிரஸ் சந்திக்கும். இதன்போது முன்வைத்த கோரிக்கைகளை ரணில் விக்கிரமசிங்கவும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஏற்றுக்கொள்ளுமிடத்து புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடவும் தீர்மானிக்கபட்டுள்ளது.

1 comment:

  1. ஒரு ரிசாத் பதியுதீனுக்காகவும் ஒரு றவூப் ஹகீமுக்காகவும் முஸ்லிம்களின் வாக்குகள் சிதறிடிக்கப்பட்டு, முஸ்லிம்களின் அரசியல் உரிமைப் போராட்டம் மலினப்படுத்தப்படுவதட்கு முஸ்லிம் மக்கள் குறிப்பாக முஸ்லிம் புத்தி ஜீவிகளும் இளைஞர்களும் உலமாக்களும் இடமளிக்க கூடாது. எனவே இவர்கள் இருவரும் ஒற்றுமை பட்டு தங்களுக்குள் ஒரு உடன்பாட்டுக்கு வந்ததன் பிற்பாடு ஒற்றுமையாக ( ஒரு தலைமைத்துவமோ அல்லது கூட்டு தலைமைத்துவமோ) ரணிலிடம் பேசுவதுதான் முஸ்லிம்களின் எதிகால அரசியலுக்கு ஆரோக்கியமாக இருக்கும். இவர்கள் இருவரும் ஒற்றுமைப்பட தவறும் பட்சத்தில் செப்டம்பர் 1 ஆம் திகதி அமையவிருக்கும் பாராளுமன்றத்தில் முஸ்லிம்களின் அரசியல் பயணம் ஒரு எடுப்பார் கைபில்லையாகத்தான் அமையும். இப்படியான நிலை முஸ்லிம்களுக்கு மிகவும் ஆபத்தானதாகவே முடியும். இதற்கான சக்தி உள்ளவர்களும் முஸ்லிம் மக்களும் இந்த இரு தலைவர்களையும் சென்ற ஜனாதிபதி தேர்தலில் பலவந்த படித்தியது போல் ஒரு சூல் நிலையை உருவாக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.