Header Ads



ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டிருந்தால் 20 லட்சம் வாக்குகளைப் பெற்றிருப்போம் - ஞானசார

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவளித்த காரணத்தினால் தமது இயக்கத்தின் நன்மதிப்பு வீழ்ச்சியடைந்ததாக பொதுபல சேனா இயக்கம் அறிவித்துள்ளது.

பொதுபல சேனா இயக்கத்திற்கு பாரியளவில் மக்கள் ஆதரவும் பிரபல்யமும் காணப்பட்டதாக அதன் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தனித்து போட்டியிட்டிருந்தால் பொதுபல சேனா குறைந்தபட்சம் இருபது லட்சம் வாக்குகளைப் பெற்றுக்கொண்டிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸ மன்னர் மனநிலையில் செயற்பட்டதாகவும், அவருக்கு ஆலோசனை வழங்கியவர்கள் பிழையான வழியைக் காட்டியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சக்திகளை துரத்தியடிக்க எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.

சீதாவக்கையை ஆட்சி செய்த மன்னர் ராஜசிங்கனே முதலில் மேற்கத்தைய சக்திகளை தோற்கடித்த பெருமைக்குரியவர் எனவும், பௌத்த மதத்தை கைவிட்டதனை தொடர்ந்து மக்களினால் அவர் தோற்கடிக்கப்பட்டார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதே நிலைமையே மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட தற்போதைய தலைவர்களுக்கும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

5 comments:

  1. Ahahahaha sriupu than waruthu ewanda pechiku

    ReplyDelete
  2. Nichayamaha seruppadi waagiyirupeerhal

    ReplyDelete
  3. இவனுக்கு ஒன்றும் எழுத முடியாது.லூசன். மலையை பார்த்து நாய் குறைத்தால் நாய்க்கித்தான் சேதம் மலைக்கு ஒன்றும் இல்லை.காத்துப்போன நாய் .

    ReplyDelete
  4. Wait until august 17 then you will find out how many total votes you got it

    ReplyDelete
  5. naangal orrumai pattal, Athai vida athihamaga eduppom , Atharkum oru neram varum

    ReplyDelete

Powered by Blogger.