Header Ads



அரசியலுக்கு வந்து UPFA க்கு தலைமை தாங்குமாறு, கோத்தாவிடம் பொதுபல சேனா கோரிக்கை


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஐக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஓரு பிரிவினருக்கு தலைமையேற்று அரசியலில் குதிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வாரம் சிறிலங்கா மிரரிற்கு வழங்கிய பேட்டியில் கோத்தபாய ராஜபக்ச அரசியலில் ஈடுபடுவது குறித்து தான் முன்னர் ஆர்வமற்றிருந்தபோதிலும்,தற்போது பல்வேறு காரணங்களுக்காக அரசியலில் நுழையவேண்டும் என தான் கருதுவதாக குறிப்பிட்டிருந்தார்.

வாய்ப்பு கிடைத்தால் நான்தேர்தலில் போட்டியிடுவேன் என தெரிவித்திருந்த அவர் எந்த கட்சியில் போட்டியிடுவது என்பதை இன்னமும் தீர்மானிக்கவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஒரு பிரிவினருக்கு பொதுத்தேர்தலில் கோத்தபாயவே தலைமை தாங்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் அவரது ஆசீர்வாதத்துடன் கடந்த ஆட்சியில் துரித வளர்ச்சி கண்டு வந்த பொதுபல சேனா கோத்தாவிடம் அரசியலில் நுழைந்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஓரு பிரிவினருக்கு தலைமை தாங்குமாறு கோரியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

3 comments:

  1. எதுவும் நடக்கலாம். மக்கள் எப்பொழுதுமே முட்டாள்களாகவே இருக்கின்றனர்.

    ReplyDelete
  2. வாடி வா , நீ சம்பார்சிச்சடு எல்லாம் பாதுகாக்க வேண்டும் என்டா அரசியலுக்கு வரனும் அது தாணே உண்ட ப்ளான்...

    ReplyDelete
  3. Sp thisaanayaka ukku ministry post koduththi rukkum pothu nee irangina enna

    ReplyDelete

Powered by Blogger.