அதிகமாக இலஞ்சம் கேட்டதாலா மரண தண்டனை..? ஆதாரங்கள் இல்லையென்கிறது இந்தோனேஷியா
இந்தோனேஷியாவில் போதை பொருள் கடத்தல் வழக்கில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த இலங்கை தமிழர் மயூரன் சுகுமாரன், ஆன்ட்ரூ சான் உள்பட 10 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு இன்று(செவ்வாய்க்கிழமை) அதிகாலை மரணதண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் சிட்னி ஹெரால்டு நாளிதழுக்கு பேட்டியளித்த பாலி நகர வக்கீல் முகமது ரிபான் கூறும்போது, ‘மயூரன் சுகுமாரன், ஆன்ட்ரூ சான் இருவருக்கும் 20 ஆண்டுகளுக்கும் கீழாக தண்டனையை குறைக்க நீதிபதிகளுக்கு பேரம் பேசப்பட்டது. ஆனால், அதிக தொகை கேட்டதால் அதை என்னால் தரமுடியாத நிலை ஏற்பட்டது’ என்று தெரிவித்து இருந்தார்.
ஆஸ்திரேலிய வெளியுறவு மந்திரி ஜூலி பிஷப், ‘லஞ்சப் பணப்பிரச்சினையில் 2 ஆஸ்திரேலியர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து இருப்பதால் இதை உடனடியாக இந்தோனேஷிய அரசு விசாரிக்கவேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தார்.
எனினும், ‘‘நீதிபதிகள் மீதான லஞ்சப் புகாருக்கு போதுமான ஆதாரங்களை அளித்தால் மட்டுமே இதுபற்றி விசாரிக்க முடியும். அப்போதும் கூட குற்றவாளிகளுக்கு விதித்த தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது’’ என்று இந்தோனேஷிய நீதித்துறை ஆணையம் தெரிவித்து உள்ளது.

Post a Comment