Header Ads



நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பம், 20 அணுகுண்டு வெடித்ததற்கு சமம், நிபுணர்கள் அதிர்ச்சி, பலியானவர்களின் எண்ணிக்கை 10000 ஆக உயரும்

இமயமலை பகுதியில் உள்ள நேபாளத்தில் கடந்த 25–ந்தேதி (சனிக்கிழமை) 7.9 ரிக்டரில் பூகம்பம் ஏற்பட்டது. அதில் காத்மாண்டு, போக்ரா, தீர்த்திநகர் உள்ளிட்ட பெரும் பாலான இடங்களில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள், ஓட்டல்கள் இடிந்து தரை மட்டமாயின.

இடிபாடுகளுக்குள் சிக்கி ஏராளமானவர்கள் பலியாகினர். இதுவரை 4,310 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இடிபாடுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. இடிபாடுகளுக்குள் இன்னும் பிணங்கள் கிடக்கின்றன.

எனவே பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டும் என அஞ்சப்படுகிறது. மேலும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நேபாளத்தில் மீட்பு பணியில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. மேலும் அங்கு சிக்கியிருக்கும் வெளிநாட்டினரை அந்தந்த நாட்டினர் மீட்டு செல்கின்றனர்.

நேபாளத்தில் இதற்கு முன்பு பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் தற்போது உலகின் மிக உயரமான இமயமலையின் எவரெஸ்ட் சிகரம் அருகே நிலநடுக்கம் உருவாகி யுள்ளது.

பூமியின் மிகப்பெரிய 2 ராட்சத நிலத்தட்டுகள் ஒன்றுடன் ஒன்று அதிவேக மாக மோதிக் கொண்டதால் ஏற்பட்டதாகவும். இது 80 ஆண்டுகளில் ஏற்கனவே உருவான நிலநடுக்கங்களை விட மிகப்பெரியதாகும்.

தொடக்கத்தில் 7.8 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது. அதுவே மிகப்பெரும் பாதிப்புக்குள்ளானது. இந்த பூகம்பம் 20 அணுகுண்டுகள் வெடித்ததற்கு சமம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக ஜப்பானின் ஹிரோசிமா நகரில் வீசிய அணுகுண்டை விட சக்தி வாய்ந்ததாக இது கருதப்படுகிறது. மேலும் இந்த பூகம்பம் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து வடமேற்கில் 40 மைல் தூரத்தில் மையம் கொண்டிருந்தது.

அதுவும் 10 முதல் 15 கி.மீட்டர் ஆழத்தில் இருந்து தாக்கியுள்ளது. இதனால்தான் அதிக அளவு அதிர்வு ஏற்பட்டு சேதமதிப்பு அதிகரித்துள்ளது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

2

நேபாள நாட்டில் ஏற்பட்ட பூகம்பத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 10000-ம் ஆக உயரும் என அந்நாட்டு பிரதமர் சுஷீல் கொய்ராலா தெரிவித்துள்ளார்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த கொய்ராலா, உலக நாடுகளை குடில்கள் மற்றும் மருத்துவ உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். போர்க்கால அடிப்படையில் அரசு மீட்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ள அவர், இது சவாலான தருணம். நாட்டுக்கு சிக்கலான நேரம் என்று கூறியுள்ளார்.

மக்கள் அனைவரும் வீடுகளை இழந்து வெட்டவெளியில் உறங்கும் நிலையில், மழை பெய்து அவர்களின் உறக்கத்தை கெடுக்கின்றது. அதுமட்டுமல்லாமல் பூகம்பத்தால் படுகாயமடைந்த 7000 பேருக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சையும் சவாலானதாக உள்ளது. எனவே உலக நாடுகள் டெண்ட்(குடில்) அமைப்பதற்கான பொருட்களையும், மருத்துவ உதவிகளையும் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

1934 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 8500 பலியான நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 10000-ம் ஆக உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இமயமலை நாடான நேபாளம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. கடந்த சனிக்கிழமையன்று நிலநடுக்கம் ஏற்பட்டபோது வெளிநாட்டில் இருந்த கொய்ராலா, ஞாயிற்றுக்கிழமையன்று நாடு திரும்பினார். அதன் பின் மீட்பு பணிகளில் முழு வீச்சில் ஈடுபடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக இன்று காலை நிலவரப்படி பூகம்பத்தால் 4349 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.