Header Ads



சந்திரிக்காவுக்கு எதிராக (ஹு) வைத்தது இவர்கள்தான்..!


முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை களங்கப்படுத்தும் பொருட்டு, அவரை கெட்ட வார்த்தைகளில் திட்டி,  ஹு வைத்தவர்கள் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் ஆதரவாளர்களே என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

குருநாகல் நகர முதல்வர் கெமுனு, துணை முதல்வர் அன்வர் சத்தார் மற்றும் நாரம்மலையைச் சேர்ந்த அருண தஹநாயக்கா ஆகியோரே இவ்வாறு மட்டமாக நடந்து கொண்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமன்றி,  ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட்ட இவர்கள் அனைவரும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து சுதந்திரக் கட்சியோடு இணைந்து கொண்டவர்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்.

அதேவேளை,  மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் நாமல் ராஜபக்‌ச தனது இணையத்தளம் ஊடாக இவ் விவகாரத்தை பெரிதுபடுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், குருநாகலல் மலியதேவ மகளிர் வித்தியாலய அரங்கில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தொகுதி அமைப்பாளர்கள் கூட்டத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.