எதிர்க்கட்சி தலைவர் பதவியை எமக்கு வழங்கவேண்டும் - சம்பந்தன் சபாநாயகரிடம் கடிதம் கையளிப்பு
இலங்கையின் நாடாளுமன்றத்தில் தற்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் எதிர்க்கட்சி தலைவர் பதவியை தமக்கு வழங்கவேண்டும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு கோரியுள்ளது.
இது தொடர்பில் கட்சியின் தலைவர் ஆர்.சம்பந்தன் இன்று சபாநாயகரிடம் கோரிக்கை கடிதம் ஒன்றை கையளித்துள்ளார்.
தேசிய அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினரும் இணைந்த பின்னர் ஏற்கனவே எதிர்க்கட்சி தலைவராக பதவிவகிக்கும் நிமால் சிறிபால டி சில்வாவுக்கு அதனை வகிக்கமுடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தனவை எதிர்க்கட்சி தலைவராக்குவதற்கான கையொப்பங்களை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் திரட்டி வருகின்றனர்.
இந்தநிலையிலேயே சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவர் பதவியை தமது கட்சிக்கு வழங்கவேண்டும் என்று சபாநாயகரிடம் கோரியுள்ளார்.
இந்தக் கடிதத்தில் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் மற்றும் தலைவர் சம்பந்தன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்

Post a Comment