Header Ads



பொதுபல சேனாவை தோளில் சுமந்து, அனைத்தையும் குழப்பிய கோத்தபாயவே, மஹிந்தவின் தோல்விக்கு காரணம்

தேசிய கொடியில் மாற்றங்களை செய்து கடந்த காலங்களில் இனவாதத்தை தூண்டும் நடவடிக்கைகளில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஈடுபட்டதாக இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

இனவாதத்தை தூண்டுவதன் மூலம் கோத்தபாய ராஜபக்ச திறமையற்ற அரசியல்வாதி என்பது தெளிவாகியுள்ளது. இனவாதத்தை தூண்டிவிட்டு செயற்படும் அவரை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைய கோத்தபாய ராஜபக்சவே காரணம் எனவும்,

அவர் பொதுபல சேனாவை தோளில் சுமந்து கொண்டு அனைத்தையும் குழப்பியதாகவும், அவர் திறமையற்ற அரசியல்வாதி எனவும் டிலான் பெரேரா கூறியுள்ளார்.

3 comments:

  1. Gotavum Mahindavum iruvaralla , avargal iruvarukkum orey arasiyal ilakku.
    Inavazaththilirunthu Mahindavai Gotavidamirunthu piriththup parka
    mudiyathu . Verukkaththakka arasiyalai nambagath thanmaiyudan
    seivazatkey Gotavum Basilum import pannappattanar. Agavey, Guru Mahinda
    thappikka mudiyazu .

    ReplyDelete
  2. Mahinda, Gota , Basil and Namal were the real cabinet.The rest of Ministers
    were for namesake. These for are responsible for the actions of Dilan's
    government . Why didn't you all stand up for your own responsibilities ?

    ReplyDelete

Powered by Blogger.