Header Ads



நாகூர் ஹனிபா காலமானார்

பிரபல இஸ்லாமிய பாடகரும், திராவிட கொள்கையில் ஈடுபாடு கொண்டவருமான நாகூர் ஹனீபா இன்று (08) சென்னையில் காலமானார்.சில நாட்களாக உடல்நலக் குறைவாக இருந்த இவர், சென்னை கோட்டூர் புரத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.

இஸ்லாமிய பாடல்களை உலகெங்கும் ஒலிக்கச் செய்து தனது குரலால் பலரது இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் பாடிய இறைவனிடம் கையேந்துங்கள் என்ற பாடல் மதங்களை தாண்டி அனைவரையும் கவர்ந்த பாடல்.

திமுகவில் அறிஞர் அண்ணா காலத்திலிருந்து மிகுந்த ஈடுபாடு கொண்டு, அக்கட்சியின் வளர்ச்சிக்கு தனது பாடல்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். திமுக தலைவர் கருணாநிதியுடன் நெருங்கிய நட்பு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


2 comments:

  1. தமிழ் பேசும் முஸ்லிம் வீடுகளில் இவர் குரல் ஒலிக்காத வீடுகளே இல்லை எனலாம்.

    இவர் குரல் ஒலிக்காத பெருநாளா? அனைவராலும் நேசிக்கப்பட்ட இவருக்கு ஜன்னத்துல் பிர்தவ்ஸ் கிடைக்கட்டுமாக.

    ReplyDelete
  2. May Allah grant him jannathul firdows

    ReplyDelete

Powered by Blogger.