Header Ads



மகாவலியில் நீராடிய சிறுவர்களில் ஒருவரை காணவில்லை, இருவர் காப்பாற்றப்பட்டனர்

(JM.Hafeez)

கம்பளை இல்லவத்துர பகுதியில் மகாவலி கங்கையில் மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி இருவர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

(6.4.2015) நன்பகல் சுமார் 12 மணியளவில் இவர்கள் ஆற்றுக்கு நீராடச் சென்றுள்ள போதே இவ்வாறு மூழகியுள்ளனர். உடனடியாகச் செயல் பட்ட அயலவர்கள் இரு சிறுவாகளை காப்பாறறி உள்ளனர். மற்றைய சிறுவரை தேடும்பணியில் ஈடபட்டுள்ளனர். 

இவர்கள் மூவரும் கம்பளை சாஹிரா கல்லூரியில் 8ம் தரத்தில் கல்வி பயில்பவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. காப்பாற்றப்பட்ட இரு சிறுவர்களையும் மேலேகாணலாம். இவர்கள் கம்பளை மரியாவத்தைப் பகுதியைச் சேர்ந்தவர்களாகும்.



No comments

Powered by Blogger.