Header Ads



கைதுக்கு எதிராக, கலகம் செய்த பசில் ராஜபக்ஸ

-நஜீப் பின் கபூர்-

பசிலுக்கு உயர்மட்ட அரசியல்வாதிகள் சிலரும் பொலிஸ் உயர் அதிகாரிகள் சிலரும் கொடுத்த, கைது செய்ய வாய்ப்பில்லை என்ற வாக்குறுதியை நம்பியே அவர் நாட்டுக்கு வந்திருக்கிறார்.

தன்னைப் பொலிசார் கைது செய்வதற்கு முன்னரே அவராகவே கடுவளை பொலிஸ் நிலையம் போய் விடயங்களைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று  எண்ணினார். என்றாலும் குற்றச்சாட்டுக்கள் பாரதூரமானது. 

எனவே விசாரணையின் பின் பொலிசார் அவரைக் கைது செய்ய முயன்ற போது அவர் அங்கு கலகம் பண்ண ஆரம்பித்தார். சத்தம் போட்டு பொலிஸ் அதிகாரிகளை அவர் அச்சுறுத்துகின்ற பாணியில் நடந்து கொண்டிருக்கின்றார். 

இப்படியாக ஒரு மணி நேரம் வரை அவர் அங்கு ரகலை செய்திருக்கின்றார். என்று எமக்குத் தகவல் கிடைத்திருக்கின்றது. நிதி மோசடி என்றால் அதற்கு செயலாளர்களும் அதிகாரிகளும் தான் பதில் சொல்ல வேண்டும் என்னைக் கேள்வி கேட்க முடியாது என்று அவர் அங்கு தர்க்கம் செய்திருக்கின்றார்.

அப்போது உயர் மட்ட பொலிஸ் அதிகாரிகள் நீங்கள் குறிப்பிடுவது சரியாக இருக்கலாம் ஆனால் உங்களிடத்தில் வேலை பார்த்த செயலாளர்களும் அதிகாரிகளும் அமைச்சரின் சிபார்சு-வேண்டுகோள் படிதான் நாம் இந்த நடவடிக்கைகளை மேற் கொண்டிருக்கின்றோம் என்ற குறிப்பை பதிந்துதான் இந்த நிதி நடவடிக்கைகளைக் கையாண்டிருக்கின்றார்கள் என்று விளக்கியபோது தடுமாறிப்போன பசில் வளைந்து கொடுக்க ஆரம்பித்திருக்கின்றார். நிலமை நினைத்தவாறு இல்லை என்பது அப்போதுதான் அவருக்குப் புரிந்தது அதன் பின்னரே மனிதன் ஒரு கட்டுப்பாட்டிற்கு வந்திருக்கின்றார்.

No comments

Powered by Blogger.