'சரித்திர முக்கியத்துவ வாக்கெடுப்பு இன்று'' - ''ரணில் பிடித்த முயலுக்கு, 3 கால்கள்''
தற்போது நாட்டில் சூடு பிடித்திருக்கின்ற ஜனாதிபதியின் அதிகாராங்களைக் குறைக்கின்ற 19 வது யாப்புத் திருத்தம் தொடர்பான முடிவுகள் நளை பகல் 12 மணிக்குள் தீர்மாணிக்கப்பட இருக்கின்றது என்று தெரிய வருகின்றது.
எமக்குக் கிடைக்கின்ற தகவல்களின்படி 19 ஐக் கரை சேர்ப்பது தொடர்பில் இன்னும் நம்பிக்கையில்லாத நிலையே காணப்படுகின்றது. எமது அவதானப்படியும் பாராளுமன்றத்தில் நடக்கின்ற நிகழ்வுகளைப் பார்க்கின்றபோதும் இந்த 19க் குழப்பியடிக்கின்ற முக்கிய நபராக இருப்பவர் பிரதமர் ரணில் என்று நாம் துணிந்து ஆளை அடையாளப்படுத்துகின்றோம்.
இந்தத் திருத்தத்தை முற்றாக ரணில் தனக்கு ஏற்ற விதமாகக் கொண்டு வந்து நிறைவேற்றிக் கொள்வதில் பிடிவாதமாக இருந்து வருகின்றார். சிறுபான்மை ஆளும் தரப்புப் பிரதமர் பெரும்பான்மை எதிர்த் தரப்பு உறுப்பினர்கள் இருக்கின்ற பாராளுமன்றத்தில் இப்படி நடந்து கொள்வது இந்த 19 விடயத்தில் ஒரு தீர்மானத்தை எட்டுவதைக் குழப்பியடிக்கவே அவர் இப்படி நடந்து கொள்கின்றார்.
எதிர்க் கட்சி குறிப்பிடுகின்ற எந்த திருத்தங்களுக்கும் அவர் சம்மதிக்காமல் பிடிவாதப் போக்குடன் நடந்து கொள்கின்றார். எனவே அவர் இவ்வாறு நடந்து கொள்வதில் பின்னணியில் யாரோ இருக்கின்றார்கள் என்றுதான் எண்ணத் தோன்று கின்றது.
கடும் ராஜபக்ஷ விசுவாசிகள் 19 விவகாரத்தில் எப்படி நடந்து கொள்வார்கள் என்று கடைசி நிமிடம் வரை சஸ்பென்சாகவே இருக்கின்றது.
சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் மைத்திரியின் கட்டுப்பாட்டில் இல்லை பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜபக்ஷ விசுவாசிகள் என்பதை நிரூபிக்க ஒரு சந்தர்ப்பமாகவும் இந்தப் 19ப் பயன் படுத்தி கட்சிக்குள் மைத்திரி செல்லாக்காசு என்ற நிலையை உலகிற்குக் கட்ட இதை ஒரு சந்தர்ப்பமாக பாவித்துக் கொள்ளவும் ஒரு முயற்சி இருப்பதாக எமக்குத் தகவல் கிடைத்திருக்கின்றது. நாளை வரை முடிவுகளுக்காகப் பொறுத்திருப்போம்.
19க்கே இப்படி என்றால் தான் கடுமையாக எதிர்க்கின்ற 20 என்ற தேர்தல் சீர்திருத்த விடயத்தில் ரணில் எப்படி நடந்து கொள்வார் என்பது சொல்லத் தேவையில்லை.

Post a Comment