Header Ads



நான் மட்டுமா பிழைசெய்தேன்..? மஹிந்த ராஜபக்ச


நான் மட்டுமா எல்லா பிழைகளையும் செய்தேன், அமைச்சரவை பிழைகளுக்கு பொறுப்பில்லையா என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

நான் பிழை செய்து விட்டதாக சிலர் குற்றம் சுமத்துகின்றனர். கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் அங்கம் வகித்த அனைவரும் பிழைகளுக்கு பொறுப்பானவர்களாகும்.

கடந்த நவம்பர் மாதம் 21ம் திகதியன்று அரசாங்கத்தையும் அமைச்சரவையையும் விட்டு விலகியவர்களும் இதற்கு பொறுப்புதாரிகளாகும்.

கடந்த அரசாங்கம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு விலகிச் சென்றவர்களும் பொறுப்பு சொல்ல வேண்டும்.

நான் செய்த எல்லா வேலைகளுக்கும் அமைச்சரவையின் அனுமதியை பெற்றுக்கொண்டிருந்தேன்.

எனவே இவை பிழையென்றால் அதற்கு அமைச்சரவையே பொறுப்பு சொல்ல வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அண்மையில் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. உண்மையில் சிந்திக்க வேண்டிய விடயம். அதிலும் இந்த முஸ்லிம் அமைச்சர்கள் எம்பிக்கள் அதிலும் முஸ்லிம் காங்கிரஸ் காரர்கள். இவர்கள் ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து கொண்டு முஸ்லிம் சமூகத்தை தங்களுது சுயநலத்துக்காக (பட்டம், பதவி, பணத்துக்கு ஆசைப்பட்டவர்கள் ) சரியான அரசியலை செய்யவில்லை என்பதுதான் உண்மை. வரும் தேர்தலில் இவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவதுடன் புது முகங்களுக்கும் புத்தி ஜீவிகளுக்கும் இடம் கொடுக்க வேண்டும்.

    ReplyDelete
  2. உண்மையில் சிந்திக்க வேண்டிய விடயம். அதிலும் இந்த முஸ்லிம் அமைச்சர்கள் எம்பிக்கள் அதிலும் முஸ்லிம் காங்கிரஸ் காரர்கள். இவர்கள் ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து கொண்டு முஸ்லிம் சமூகத்தை தங்களுது சுயநலத்துக்காக (பட்டம், பதவி, பணத்துக்கு ஆசைப்பட்டவர்கள் ) சரியான அரசியலை செய்யவில்லை என்பதுதான் உண்மை. வரும் தேர்தலில் இவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவதுடன் புது முகங்களுக்கும் புத்தி ஜீவிகளுக்கும் இடம் கொடுக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.