Header Ads



முதலமைச்சர் விக்னேஸ்வரன் வசைபாடுவதை நிறுத்த வேண்டும் - அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல

எமது அரசுதான் வடக்கு மாகாணத்துக்கு விடுதலை பெற்றுக் கொடுத்தது. அதனை வடக்கு மாகாண முதலமைச்சர் மறக்கக்கூடாது. மத்திய அரசு மாகாண அரசை கட்டுப் படுத்துவதாக, சர்வதேச சமூகத்திற்கு முதலமைச்சர் வசைபாடிக் கொண்டிருக்கக் கூடாது  இவ்வாறு அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறியுள்ளார்.

வடக்கு மாகாணத்துக்கு அண்மையில் பயணம் மேற் கொண்டு திரும்பிய ஐ.நா. உதவிச் செயலரிடம், வடக்கு முதலமைச்சர் பிரதமருடனான முரண்பாடு தொடர்பில் கருத்துத் தெரிவித்திருந்தார். 

அதில் மத்திய அரசு மாகாண அரசை முடக்குவது தொடர்பிலும் குறிப்பிட்டிருந்தார். 
இது தொடர்பாக, கருத்துத் தெரிவிக்கையிலேயே, அமைச்சர் லக் ஷ்மன் கிரியயல்ல இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
  
"தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போர் முடிவடைந்திருந்தாலும், வடமாகாணம் விடுதலையடையாது இருந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் இராணுவத்தின் பிடியில் சிக்கிக் கிடந்தனர். 

வடக்கு மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டும் சொத்துக்கள் பறிக்கப்பட்டும், அந்த மக்களை அடிமைகளாக நடத்தியமை தொடர்பில் தமிழ் தலைவர்கள் கடந்த காலத்தில் குரல் எழுப்பி வந்தனர்.'' என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

"கடந்த ஜனவரி 8 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுடன் வடக்கு விடுதலையடைந்தது. தேர்தலில் வடக்கு வாழ் தமிழ் மக்கள் தமது முழுமையான ஆதரவை எமக்கு கொடுத்தமையும் எமது வெற்றிக்கு உதவியமையும் வடக்கு மக்களின் ஆதங்கத்தை முழுமையாக விளங்கிக் கொள்ள முடிந்தது.

அதேபோல் எமது அரசு உதயமான பின்னரே வடக்கில் இத்தனை ஆண்டுகளாக அபகரிப்பில் இருந்து தமிழ் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டு தமிழ் மக்களிடையே ஒப்படைக்கப்பட்டுள்ளது. இராணுவ முகாம்களில் இருந்து பொதுமக்களின் காணிகளை அவர்களிடமேயே ஒப்படைத்திருக்கின்றோம். 

அதுமட்டுமின்றி நிவாரணங்கள் அனைத்தும் தமிழ் பேசும் வடக்கு மக்களையும் உள்ளடக்கியே மேற்கொள்ளப்பட்டுள்ளது.'' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.