Header Ads



மக்கள் மகிந்தவை மாத்திரம் கேட்கிறார்கள், என்னை கல்லால் அடிப்பார்கள்..!

கடந்த காலங்களில் ஊர் பக்கம் சென்றால் மக்கள் கேட்பது தொழில் வேண்டும், பாதைகள் அமைத்து தரவேண்டு என்றே ஆனால் இன்று மகிந்த வேண்டுமென்று மாத்திரமே கேட்கிறார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

 களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். என்னை பார்ப்பதற்கு இன்றும் என் ஊர் மக்கள் வருகிறார்.

நான் சென்று அமைச்சர் பதவி பெற்றால் மக்கள் என்னை கல்லால் அடிப்பார்கள். கடந்த காலங்களில் மக்கள் அதை செய்து தரவேண்டும் இதனை செய்து தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டே இருப்பார்கள் செய்து தராவிட்டால் எங்களை மக்கள் திட்டித்தீர்ப்பார்கள்.

இன்று மக்கள் ஒன்றையும் கேட்பதில்லை. மகிந்தவை மீண்டும் அழைத்துவருவீர்களா என்று மாத்திரம் கேட்கிறார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. Before you come to politics you are an ordinary person so you worked as guard,driver etc. Now you say that people need mahinda but you need him to gain more than what you have now.

    ReplyDelete

Powered by Blogger.