Header Ads



சம்பிக்கவுக்கு மரைக்காரின் சவால்

முடிந்தால், தேர்தலில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்று காட்டுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார், அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கு பகிரங்க சவாலை விடுத்துள்ளார்.

தேர்தலில் வெற்றிபெற முடியாத தரப்பினர் அரசியலமைப்பு சூழ்ச்சியின் மூலம் அதிகாரத்திற்கு வர முயற்சிப்பதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்திருந்தமைக்கு பதிலளிக்கும் வகையிலேயே மரிக்கார் இந்த சவாலை விடுத்துள்ளார்.

2001 ஆம் ஆண்டு நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காக சுயாதீன ஆணைக்குழுக்களை ஸ்தாபிப்பது உள்ளிட்ட அரசியலமைப்புத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்ட போது அதனை நாடாளுமன்றத்தில் எதிர்த்த ஒரே உறுப்பினர் சம்பிக்க ரணவக்க எனவும் மரிக்கார் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனை எதிர்த்த சம்பிக்க ரணவக்க 18வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக கை தூக்கினார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பியது, அவரை விட பயங்கரமான சர்வாதிகாரியை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக அல்ல எனவும் எஸ்.எம்.மரிக்கார் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.