நியூசிலாந்து வாழ் இலங்கை இஸ்லாமியர்களின், விளையாட்டுபோட்டி பரிசளிப்பு விழா (படங்கள் இணைப்பு)
-நியூசிலாந்திலிருந்து MJM Sharthaar-
நியூசிலாந்து வாழ் இலங்கை முஸ்லிம்கள் ஒன்றிணைந்து நடாத்தும் SLSNZ
அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட வருடாந்த விளையாட்டு போட்டிகள்
நிறைவுற்று, போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா கடந்த 05/04/15 அன்று மாலை
ஆக்லந்து, மௌன்ட் ரொஸ்கில் கிராமர் பாடசாலை மண்டபத்தில் வெகு விமர்சையாக
நடை பெற்றது.
நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இலங்கை தேசிய கீதம் தமிழில் இசைக்கப்பட்டமையும், அதற்கு பரிசுகளை பெற வந்திருந்த இளம் தலைமுறையினர் மரியாதை செய்ததும் மனதை நெகிழவைக்கும் ஒரு நிகழ்வாக அமைந்திருந்தது.
அமைப்பின் தலைவரான பாரூக் கலந்தர் அவர்களது வரவேற்புரையுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகியதுடன், அமைப்பின் செயலாளர் ஜெரீத் ஆப்தீன் அவர்களின் நெறியாள்கையில் அமைப்பின் உப தலைவர் அரபாத் காஸிம் பரிசளிப்பு நிகழ்வுகளை நயம்பட தொகுத்து வழங்கினார்.
இலங்கை முஸ்லிம்களின் அமைப்பான SLSNZ கடந்த 7 வருடங்களுக்கும் மேலாக இலங்கை இஸ்லாமிய பிள்ளைகளின் கலை கலாச்சார விளையாட்டு துறைகளில் பெரும் பங்காற்றி வருவது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவ்வமைப்பானது நியூசிலாந்துக்கு கல்விகற்க வரும் இலங்கை மாணவர்களுக்கும் தம்மால் இயன்ற உதவிகளை செய்துவருவதும் இங்கு குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.

Post a Comment