சுதந்திர கட்சி உறுப்பினர்கள் மைத்திரி + சந்திரிக்காவுடன் சந்திப்பு..!
இலஞ்ச ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மீது பாராபட்சமின்றி சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதையும், அவர்களை கைது செய்வதையும் எதிர்க்கவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சுதந்திர கட்சி உறுப்பினர்கள் சிலர் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
குறித்த சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவும் கலந்துகொண்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் தொடர்பாக கடந்த காலங்களில் இடம்பெற்ற விசாரணைகளின் மூலம் ராஜபக்ச ஆட்சி காலத்தில் உயர்ந்த பதவி வகித்த அரசியல்வாதிகள் மூவர் தொடர்பாக தெளிவான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அவ்வாறான மோசடிக்காரர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்வதற்கு முன்னர் அவர்கள் தொடர்பாக மக்களுக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதியிடம் குறித்த உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
.jpg)
What is reason of informing before taking judgement ? This will create problem among publics. Judgement is not from public but form Rule of Law.
ReplyDeleteMy3 should have take some strong and tuff decision for whole country.otherwise mahinda team will spoiled people and country.if need he should have use the power of excellancy president
ReplyDeleteMr going to dominate.
ReplyDelete