ஜனாதிபதித் தேர்தலில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீற மைத்திரிக்கும், அரசாங்கத்திற்கும் உரிமை கிடையாது
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அரசாங்கத்திற்கும் எந்த உரிமையுமில்லை என சமூக நீதிக்கான பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் அமைப்பு தெரிவித்துள்ளது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்தி அரசியலமைப்பில் சீர்த்திருத்தங்களை மேற்கொள்வதாக கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்களுக்கு வாக்குறுதி வழங்கப்பட்டது.
இதனடிப்படையில் மக்களின் ஆணையில் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதிக்கும் மற்றும் அவர் நியமித்துள்ள அரசாங்கத்திற்கும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறி செயற்பட எந்த உரிமையுமில்லை.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க வேண்டும் என்ற பொது எதிர்பார்ப்பே ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இதன் பின்னணியில் தூர நோக்கம் கொண்ட அரசியல் கட்சிகள் மற்றும் பிரஜைகள் குழுக்களும் இருந்தன என பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலில் இணைந்து செயற்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அணிகள் தற்போது தமது நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்பட்டு வருகின்றன.
இவ்வாறான நிலையில், பொதுமக்களின் பக்கம் இருந்து நோக்கும் போது இந்த அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தை செயற்பாட்டு ரீதியாக முன்னெடுத்து செல்ல வேண்டிய தேவை காணப்படுகிறது.
அவசர பணியாக 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை பலன் தரும் வகையில் நிறைவேற்றி கொண்டு ஏனைய சீர்த்திருத்தங்களை நோக்கி செல்லுமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறும் சீர்த்திருத்தங்களுக்கு எதிரான சக்திகளை தோற்கடிக்க செயற்பாட்டு ரீதியாக தலையிடுமாறும் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு பங்களிப்பு செய்த சகல தரப்பினரிடமும் கோரிக்கை விடுப்பதாகவும் சமூக நீதிக்கான பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

Post a Comment