மைத்திரிக்கு முன் உள்ள 2 தெரிவுகள்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கா அல்லது நாட்டு மக்களுக்காக தாம் விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானிக்க வேண்டுமென ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதாக ஜனாதிபதி வாக்குறுதி அளித்திருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வாக்குறுதிகளை ஏற்றுக்கொண்ட மக்கள் அவரை ஜனாதிபதியாக நியமித்துள்ளதாகவும், அதனை ஜனாதிபதி நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
19ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மைத்திரிபாலவை ஆதரிக்கவில்லை எனவும், மக்களே அவரை ஜனாதிபதி ஆக்கினார்கள் எனவும் அவர் தெரிவித:துள்ளார்.
எனவே நாட்டுக்கு மக்களுக்கு விசுவாசமாக நடந்துகொள்வதா அல்லது கட்சிக்கு விசுவாசமாக நடந்துகொள்வதா என்பதனை ஜனாதிபதி தீர்மானிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
19ம் திருத்தச் சட்டம் முற்று முழுதாக மக்களின் அபிலாஸைகளை பூர்த்தி செய்துள்ளதாக கருதப்பட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment