ஞாபக மறதியால் 1 வயது, குழந்தையின் உயிர் போனது
அமெரிக்காவில் நபர் ஒருவரின் ஞாபகமறதியால் 1 வயது குழந்தை ஒன்று சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கிளேவ்லேண்டு(Cleveland) பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு நபர் ஒருவர், தனது நண்பரை பார்ப்பதற்காக சென்றுள்ளார்.
அங்கு சிறிது நேரம் பேசியபின்னர், திரும்பி செல்லும்போது தான் கொண்டுவந்திருந்த கைதுப்பாக்கியை மறந்து விட்டு அங்கேயே விட்டுச்சென்றுள்ளார்.
அந்த வீட்டில் இருந்த 3 வயது குழந்தை, துப்பாக்கியை எடுத்து விளையாடியபோது, எதிர்பாரதவிதமாக அந்த துப்பாக்கியால் சுட்டுள்ளான்.
அதில் இருந்து சீறிப்பாய்ந்த குண்டு அருகில் இருந்த ஒரு வயது ஆண் குழந்தையின் முகத்தில் பாய்ந்தது.
இதனால் படுகாயம் அடைந்த அக்குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய பொலிசார், துப்பாக்கியை ஞாபகமறதியால் விட்டுச்சென்ற நபர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Post a Comment