ஆப்கானிஸ்தானிய புரூஸ்லீ..!
-Kalaiyarasan Tha-
இவர் ஆப்கானிஸ்தான் புரூஸ்லீ! அப்பாஸ், இருபது வயது. வறுமையான குடும்பப் பின்னணியை கொண்டவர். சிறு வயதில் இருந்தே, இவரது ஆதர்ச நாயகன் புரூஸ்லீ மாதிரி வர வேண்டுமென்பதற்காக, குங்க்பூ சண்டைக் கலையை பயின்று வந்துள்ளார்.
புரூஸ்லீ மாதிரி உருவத் தோற்றம் கொண்டிருப்பது மட்டுமல்ல, அவரைப் பின்பற்றி, அங்க அசைவுகளை, நுணுக்கங்களை பிரதியெடுத்து செய்யும் திறமை பெற்றுள்ளார். ஒரு கட்டத்தில், இவரது தந்தை நோய் வாய்ப்பட்டு படுக்கையில் விழுந்ததால், வகுப்புகளுக்கு பணம் கட்ட முடியாமல் இருந்தது. ஆயினும், இவரது ஆசிரியர் இலவசமாக பயிற்றுவித்தார்.
அமெரிக்காவில், ஹாலிவூட் திரைப்படங்களில் தனக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு அப்பாஸ் காத்திருக்கிறார். அவர் மீது பொறாமை கொண்டவர்கள், கொலைப் பயமுறுத்தல் விட்டுள்ள படியால், எப்படியாவது நாட்டை விட்டு வெளியேற விரும்புகிறார்.
இதற்கிடையில், பிபிசி, அல்ஜசீரா, மற்றும் சீன தேசிய தொலைக்காட்சி நிறுவனங்கள் "ஆப்கான் புரூஸ்லீ" பற்றி ஆவணப் படங்களை எடுத்து பிரபலப் படுத்தி உள்ளன.

Post a Comment