10 வயது சிறுமியின் கேள்வி - அதிர்ந்துபோன டேவிட் கேமரூன்
இங்கிலாந்து நாட்டில் மே மாதம் 7-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அந்நாட்டு பிரதமரான டேவிட் கேமரூன் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக மீண்டும் போட்டியிடுகிறார். பிரதான எதிர்க்கட்சியாக உள்ள தொழிலாளர் கட்சி, சுதந்திர கட்சி என்று அங்கு மும்முனைப் போட்டி நிலவி வருகிறது.
தேர்தலை முன்னிட்டு சூறாவளி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் கேமரூன் நேற்று இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது இந்திய வம்சாவளி சிறுமி ஒருத்தி கேட்ட கேள்வி கேமரூனை திக்கு முக்காடச் செய்தது. பள்ளியில் படிக்கும் 10 வயது சிறுமியான ரீமா “உங்களைத் தவிர்த்து வேறு ஒருவர் பிரதமராக வேண்டும் என்றால் நீங்கள் யாரை தேர்ந்தெடுப்பீர்கள்? ஏன் அவரை தேர்ந்தெடுப்பீர்கள்?” என்ற திகைக்க வைக்கும் கேள்வியை கேட்டாள்.
இந்த கேள்வியால் சில நிமிடங்கள் செயலிழந்து போன பிரதமர் “வாவ்... இந்த கேள்விக்கு பதிலளிப்பது மிகவும் கடினமானது. இந்த கேள்விக்கு நான் பதிலளிக்கப் போவதில்லை. காரணம் நாட்டில் நிறைய பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். வேறொருவர் பிரதமராக வர வேண்டும் என்று நினைத்திருந்தால், நான் இந்த தேர்தலில் போட்டியிட்டிருக்க மாட்டேன்.” என்றார்.
பிரச்சாரம் முடிந்து கிளம்பும் போது "தேர்தல் பிரச்சாரத்தின் போது என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளிலேயே தலை சிறந்த கேள்வி இதுதான்" என இங்கிலாந்து பிரதமர் சிறுமி ரீமாவின் சாமர்த்தியத்தைப் பாரட்டியது குறிப்பிடத்தக்கது.

Post a Comment