Header Ads



குறைவான எண்ணிக்கை கொண்ட முஸ்லிம் குடும்பத்தினர் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வாழ முடியும் - சிவசேனா

முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் குடும்ப கட்டுப்பாடு செய்துகொள்ளவேண்டும் என்று சிவசேனா அடுத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது.

முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஓட்டுரிமையை பறிக்க வேண்டும் என தலையங்கம் எழுதிய இரண்டு நாட்களுக்கு பின் மீண்டும் சர்ச்சைக்குரிய இத்தலையங்கத்தை சிவசேனாவின் பத்திரிகையான சாம்னா வெளியிட்டுள்ளது. இந்து மகா சபையை சேர்ந்த சாத்வி தேவா தாகூர், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு கருத்தடை செய்யவேண்டும் என்று கூறியது தவறு என்று கூறியுள்ள சிவசேனா, கருத்தடைக்கு பதிலாக குடும்ப கட்டுப்பாடு என்ற வார்த்தையை தான் சாத்வி பயன்படுத்தியிருக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இஸ்லாமிய சமுதாயம் மற்றும் நாட்டின் நலனை முன்னிறுத்தியே இவ்வாறு தாங்கள் வலியுறுத்துவதாகவும் சிவசேனா கூறியுள்ளது. குறைவான எண்ணிக்கை கொண்ட முஸ்லிம் குடும்பத்தினர் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வாழ முடியும் என்றும் அக்கட்சி தனது தலையங்கத்தில் தெரிவித்துள்ளது. தொடர்ந்து இவ்வாறு சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக சிவசேனா பேசி வருவதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. We also like to say something for the sake of the goodwill of the country.

    Stop your racism and joining hand with Israel in your current hate project against Muslims. We ask you this also for the sake of this country.

    ReplyDelete
  2. All the 'Senas' are against the Muslims in every aspects, there should be a way out for this.

    ReplyDelete
  3. Don't need your advice to Muslim community .we know how to living better life.

    ReplyDelete
  4. Muhammed Rasheed, கொமன்ட் பன்ன முதலில் செய்தியை கொஞ்சம் வாசித்துவிட்டாவது பண்ணுங்கள். இது இந்த நாடு குறித்த செய்தி இல்லை, பாரத நாடு குறித்த செய்தி.

    ReplyDelete

Powered by Blogger.