Header Ads



NFGG யின் பாராளுமன்றத் தேர்தலுக்கான, வேட்பாளர்களைத் தெரிவுசெய்யும் உள்ளக வாக்கெடுப்பு

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் NFGGயின் பங்குபற்றுதல் தொடர்பான விஷேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (07.03.2015) காத்தான்குடியில் இடம்பெற்றது.

NFGGயின் தேசிய அமைப்பாளர் MBM.பிர்தௌஸ் அவர்களின் தலைமையில் NFGGயின் காத்தான்குடி பிரதேச செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் NFGGயின் காத்தான்குடி பிரதேச காரியாலயத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

இதில், NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான் அவர்களும் MACM.ஜவாகிர், MCM.முஹ்சின் உள்ளிட்ட PMGGயின் சூறாசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

NFGG, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் பங்குபற்றுவது தொடர்பில் முன்னெடுக்கும் நடவடிககைகள் பற்றியும் தேர்தல் முறை மாற்றம் குறித்து மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் பற்றியும் விரிவான விளக்கங்கள் இதன்போது அளிக்கப்பட்டன.

அத்தோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் NFGG சார்பாக நிறுத்தப்படவுள்ள வேட்பாளர்களில் ஒரு தொகுதியினரை தெரிவு செய்வதற்கான இரண்டாம் கட்ட வாக்கெடுப்பும் இந்நிகழ்வில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இவ்வாக்கெடுப்பின் முதற்கட்டத்தின்போது, NFGGயின் காத்தான்குடி பிரதேச தலைமைத்துவசபை உறுப்பினர்கள், எதிர்வரும் தேர்தலில் நிறுத்தப்பட தகுதியான ஒரு தொகுதி வேட்பாளர்களை உள்ளக இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்திருந்தனர். இதன் இரண்டாம் கட்ட வாக்கெடுப்புக்கள் NFGGயின் காத்தான்குடி பிரதேச செயற்குழு உறுப்பினர்கள் மத்தியில் தற்போது நடாத்தப்பட்டு வருகின்றது.

இதேவேளை, NFGGயின் அரசியல் வேலைத்திட்டங்கள் முன்னெடுபக்கப்படும் ஏனைய பிரதேசங்களில் இருந்தும் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் இதுபோன்ற வாக்கெடுப்புக்களை எதிர்வரும் நாட்களில் NFGG நடாத்தவுள்ளது.


No comments

Powered by Blogger.