பாடசாலைகளுக்குள் தனிப்பட்ட அரசியல், செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாம் - றிசாத்
-இர்ஷாத் றஹ்மத்துல்லா-
சமூகத்தின் எதிர்கால சந்ததிகளை கற்றவர்களாக உருவாக்கும் பாடசாலைகளுக்குள் தனிப்பட்ட அரசியல் ரீதியான செயற்பாடுகளை எவரும் முன்னெடுக்க வேண்டாம் என வேண்டுகோள்விடுத்துள்ள வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தற்போதைய வடமாகாண சபை இல்லாத காலத்திலும் எமது பணிகள் சகல சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக அமைந்தது எஎன்றும் கூறினார்.
வவுனியா மாவட்ட பாடசாலைகளின் கல்வி நிலை தொடர்பில் ஆராயும் கூட்டம் வவுனியா பட்டானிச்சூர் தேசிய பாடசாலை மண்டபத்தில் இடம் பெற்ற போது அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். வவுனியா மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளின் அதிபர்கள்,பாடசாலை அபிவிருத்தி சங்கப் பிரதி நிதிகள்,ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் உரைாற்றுகையில்.-
கடந்த 30 வருடங்களாக எமது வன்னி மாவட்ட மக்கள் கல்வித்துறையில் கண்ட பின்னடைவு தொடர்பில் நன்கு அறிந்தவன் என்ற வகையில் எனது பாராளுமன்ற பிரவேசத்தையடுத்து முடியுமான அளவுக்கு கல்விக்கான உதவிகளை வழங்கியுள்ளேன்.
மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த போது அனதை்து பாடசாலைகளுக்கும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள்,பாடசாலை கட்டிடங்கள்,ஆசிரியர்கள் என்பனவற்றை பெற்றுக் கொடுத்துள்ளான்.இதில் இன ரீதியாக நான் ஒரு போதும் பார்த்ததில்லை.எல்லோரும் கல்வியினை பெற வேண்டும்.அவர்கள் கற்ற கல்வியினை கொண்டு பிறர் நன்மைய பயக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற நீண்ட துார சிந்தனை கொண்டவனாக நான் இருக்கின்றேன்.
நான் பின்பற்றும் இஸ்லாம் மார்க்கம் கல்விக்கான உயர் இடத்தை கொடுத்துள்ளது.இறை துாதர் முஹம்மத் (ஸல்) அலைஹிவஸல்லம் அவர்களுக்கு இறைவன் கற்றுக் கொடுத்த முதல் வசனம்,ஒதுவீராக என்பது.அது கல்வியின் முக்கியத்துவத்துக்காக மகத்துவத்தை கொடுக்கும் ஒன்றாகவுள்ளது.
சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் போதாமை.வளப்பற்றாக்குறையின்மை என்பது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வடமாகாண சபை இல்லாத காலத்தில் எமக்கு வருகின்ற அனைதது கல்வி சார் செயற்பாடுகளுக்குமான நிதி ஒதுக்கீடுகளை மிகவும் நேர்மையாக வழங்கியுள்ளோம்.இதில் இன ரீதியாக நாம் பார்த்ததில்லை.பாடசாலை என்பது ஒரு பல்கலைக்கழகமாகும்.இங்கு பல வகையான கற்கைகள் காணப்படுகின்றன.
இந்த பாடசாலைகளின் கற்கைகள் சரியாக அமைய வேண்டும்.சில பாடசாலைகளில் மேலதிக ஆசிரியர்கள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.அதிபர்கள் இந்த விடயத்தில் கல்வி பணி்ப்பாளருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.எமது மாவட்டத்தில் இருந்து பல்கலைக்கழக தெரிவுகளுக்கு அதிகமான மாணவர்கள் உள்ளீர்க்கப்பட வேண்டும்.பல் துறை சார்ந்தவர்கள் உருவாக வேண்டும்.இவர்கள் எமது மாவட்டத்தில் எல்லா துநைகளிலும் பணியாற்ற வேண்டும்.
அண்மையில் ஒரு பாடசாலையின் நிகழ்வுக்கு சென்றிருந்தேன்.அங்னுகு ஒரு ஆசிரியை கௌரவிக்கப்பட்டார்கள் எதற்காக என்றால் தனது ஆசிரிய சேவையில் இருந்து ஓய்வூதியம் எடுத்தப் பின்னர் இலவசமாக பிள்ளைகளுக்கு கல்வி போதிப்பதற்காக,இப்படிப்பட்டவர்கள் எமது மண்ணில் உருவாக வேண்டும்.பாடசாலைகளில் கற்பவர்கள் மாணவர்கள்.அவர்களை இன ரீதியாக,மத ரீதியாக பிரி்த்து கல்வி போதிக்க முடியாது.எவராக இருந்தாலும் ஆசிரியர்கள் தமது கல்வியினை வழங்க வேண்டும்.
வடமாகாண சபையின் கல்வி அமைச்சர் இந்த வன்னி மாவட்ட மாணவ சமூகத்தின் மேம்பாடுகள் தொடர்பில் தமது கவனத்தை செலுத்தி , தேவையான வளங்களை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளவிரும்புகின்றேன் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு கூறினார். வடமாகாண சபை உறுப்பினர் வீ்.ஜயதிலக,றிப்கான் பதியுதீன் உட்பட பலரும் இதன் போது சமூகமளித்திருந்தனர்.

Post a Comment