Header Ads



பௌத்தத்தை பாதுகாக்க, பௌத்தர்கள் கோருகின்றார்களே தவிர, ஏனைய சமூகங்களை ஒடுக்க கோரவில்லை

நாட்டை பிளவுபடுத்த வேண்டும் என்ற நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி செயற்படவில்லை என வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கோரிக்கையாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் முல்கிரியாகலவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேற்குலக நாடுகளில் வாழ்ந்து வரும் தமிழீழ விடுதலைப் புலி குழுக்கள் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்தியும், உருவ பொம்மைகளை எரித்தும் வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஐக்கிய இலங்கை என்ற கோட்பாடு பாதுகாக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கியமையே இதற்கான காரணமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவிலேயே மைத்திரிபால சிறிசேன தேர்தலில் வெற்றியீட்டினால் என்ற பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக ஐரோப்பாவில் போராட்டம் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ் சமூகத்திற்கு சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் அனைத்து இன சமூக மக்களும் சமமாக நடத்தப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன,மத,மொழி அல்லது வகுப்பு ரீதியில் மனிதர்கள் ஒடுக்கப்படுவதனை கௌதம புத்தர் ஒருபோதும் அனுமதித்தில்லை என தெரிவித்துள்ளார்.

எனினும் ஒரு சில தரப்பினர் இனவாத கோட்பாடுகளை பிரச்சாரம் செய்வதில் தீவிரம் காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பௌத்தர்கள் பௌத்த மதத்தை பாதுகாக்குமாறு கோருகின்றார்களே தவிர, ஏனைய இன சமூகங்களை ஒடுக்குமாறு கோரவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. BBS directly in public,has been challenging that Muslims are a threat to Buddism and
    your govt should take steps to stop them and others targeting Muslims.Racism in
    all forms must be eliminated.

    ReplyDelete
  2. BBS conduct the rasialism no one can come forward against bbs but he is a Budhist where is Budhist speech. Clergy can kill the human

    ReplyDelete

Powered by Blogger.