Header Ads



மன்னாரில் றிசாத் தலைமையில், நரேந்திர மோடியை வரவேற்க ஏற்பாடு


-இர்ஷாத் றஹ்மத்துல்லா -

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொள்ளும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 14 ஆம் திகதி மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார் பியர் கிராமத்துக்கு வருகைத்தரவுள்ளதாக வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில் வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

மன்னார் அரசாங்க அதிபர் பணிமனையில் இன்று(2015.03.08) காலை இடம் பெற்ற இந்திய பிரதமரின் மன்னார் விஜயம் தொடர்பான நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து கூட்டத்தின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

மாவட்ட அரசாங்க அதிபர்,மன்னார் பிரதேச செயலாளர்,மன்னார் நகர சபை தலைவர் நெடுஞ்சாலைகள் அமைச்சின் பொது முகாமைளார்,சிருஷ்ட பொலீஸ் அதிதயட்சகர்,பொறியியளாலர்கள், இரானுவ அதிகாரிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை கொண்ட கூட்டம் இடம் பெற்றது.

இம்மாதம் 13 ஆம் திகதி இலங்கை வரும் இந்திய பிரதமர் இந்திய அரசாங்கத்தின் நிதியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள மடு-தலை மன்னார் புகையிரத சேவையினை வைபவ ரீதியாக 14 ஆம் திகதி காலை 10.45 க்கு ஆரம்பித்து வைப்பார்.இந்த ஆரம்ப நிகழ்வு தலைமைன்னார் பியர் புகையிரத நிலையத்தில் இருந்து இடம் பெறும்.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த நிகழ்வில் வன்னி மாவட்டத்தின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபையின் உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் உள்ளிட்ட உறுப்பினர்கள், அரச திணைக்களங்களின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இதன் போது இஙகு குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வுகளுக்கு வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இப்பிரதேசத்தில் மகத்தான வரவேற்பும் அளிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்திய பிரதமர் ஒருவர் மன்னாருக்கு வருவது இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்று என்றும் அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டியதுடன்,வன்னி மாவட்ட மக்களின் நன்றிகளையும் அவர் இதன் போது இந்திய அரசுக்கு தெரிவித்தார்.



No comments

Powered by Blogger.