Header Ads



அமைச்சரவை மாற்றியமைக்கப்படுமா..? மைத்திரி என்ன செய்யப்போகிறார்..??

பிரிட்­ட­னுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்­டுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நாடு திரும்­பி­யதும் அமைச்­ச­ர­வையில் சில மாற்­றங்கள் இடம்­பெ­றலாம் என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்கு முன்னர் தேசிய அர­சாங்கம் ஒன்றை அமைப்­ப­தற்கு சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி இணங்­கி­யுள்ள நிலையில் ஜனா­தி­பதி நாடு திரும்­பி­யதும் அதற்­கான முயற்­சிகள் எடுக்­கப்­ப­டலாம் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

எனினும் எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்கு முன்னர் தேசிய அர­சாங்­கத்தை அமைப்­ப­தற்கு ஐக்­கிய தேசிய கட்சி விரும்­ப­வில்லை என்றும் தேர்­தலின் பின்னர் தேசிய அர­சாங்கம் அமைக்க ஐக்­கிய தேசிய கட்சி தயா­ராக இருப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை "எதிர்­வரும் 23 ஆம் திக­திக்கு பின்னர் தற்­போ­தைய அர­சாங்­கத்தை கொண்டு நடத்­து­வ­தற்கு எமக்கு மக்­களின் ஆணை கிடைக்­க­வில்லை. மேலும் எமது கட்­சியின் முக்­கி­யஸ்­தர்கள் மற்றும் கீழ் மட்ட உறுப்­பி­னர்கள் அனை­வ­ருக்கும் தேர்­த­லுக்கு தயா­ரா­கு­மாறு பணிக்­கப்­பட்­டுள்­ளது" என்று ஐக்­கிய தேசிய கட்­சியின் தவி­சாளர் மலிக் சம­ர­விக்­ரம தெரி­வித்­துள்ளார்.

"ஐக்­கிய தேசிய கட்சி தேசிய அர­சாங்­கத்தை விரும்­பு­கின்­றது. ஆனால் அந்த தேசிய அர­சாங்கம் எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்கு பின்­னரே அமை­ய­வேண்டும் என்­பது எமது நிலைப்­பா­டாகும்" என்றும் ஐ.தே.க.வின் தவி­சாளர் சம­ர­விக்­ரம ஆங்­கில ஊடகம் ஒன்­றுக்கு தெரி­வித்­துள்ளார்.

"ஒரு வாரம் அல்­லது இரண்டு வாரங்­க­ளுக்கு பாரா­ளு­மன்றத் தேர்தல் தாம­த­மா­கின்­றமை தொடர்பில் ஐக்­கிய தேசிய கட்­சிக்கு பிரச்­சினை இல்லை. ஆனால் 100 நாட்­க­ளுக்கு பின்னர் இந்த அர­சாங்­கத்தைக் கொண்டு நடத்த மக்கள் ஆணை வழங்­க­வில்லை" என்றும் மலிக் சம­ர­விக்­ரம குறி­ப­பிட்­டுள்ளார்.

கடந்த வியா­ழக்­கி­ழமை கூடிய சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் மத்­திய குழு ஜனா­தி­பதி மைத­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான அர­சாங்­கத்­துடன் இணைந்து சுதந்­திரக் கட்சி தேசிய அர­சா்­ஙகம் அமைப்­ப­தற்கு அனு­மதி அளித்­தி­ருந்­தது.

அத்­துடன் சுதந்­திரக் கட்­சியின் சார்பில் எத்­தனை அமைச்­சுக்­களை பெறு­வது யாருக்கு அமைச்சுப் பத­வி­களை வழங்­கு­வது என்­பது குறித்து ஆராய எதிர்க்­கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி. சில்வா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலர் அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேம்ஜயந்த ஆகியோரைக் கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.