Header Ads



இலங்கை முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஜெனீவா அமர்வில் நிஸாம் காரியப்பர்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சிறிலாங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர முதல்வருமான சட்ட முதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் இன்று திங்கட்கிழமை நள்ளிரவு ஜெனீவாவுக்கு பயணமாகிறார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 28 ஆவது வருடாந்த அமர்வில் பங்கேற்பதற்காகவே அவர் ஜெனீவா செல்கிறார்.

இலங்கை முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி மேற்படி அமர்வில் பங்கேற்கவுள்ள நிஸாம் காரியப்பர், இலங்கையில் கடந்த காலங்களில் சிறுபான்மையினர் மீது மத, கலாசார ரீதியாக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்து உரையாற்றவுள்ளார்.

இலங்கை நிலைவரம் தொடர்பில் இம்மாதம் 12 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெறவுள்ள Side Event எனும் பிரத்தியேக அரங்கில் உரையாற்றுவதற்கான சந்தர்ப்பம் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

No comments

Powered by Blogger.