Header Ads



இந்தியாவிடம் வருத்தம் தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க

கடந்த சில நாட்களுக்கு முன் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களை சுடுவதற்கு எங்களுக்கு சட்டம் அனுமதி அளித்துள்ளது என்று கூறியிருந்தார். இந்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள், மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த பிரச்னை குறித்து மக்களவையில் எதிர்க்கட்சிகள் விளக்கம் கேட்டனர். இதற்கு பதிலளித்து பேசிய சுஷ்மா ஸ்வராஜ் கூறியபோது,

இந்திய மீனவர்களின் நலனை பாதுகாப்பதில் இந்திய அரசுக்கு கடமை உண்டு. மோடி அரசு பொறுப்பேற்ற பிறகு ஒரு மீனவர் கூட சுட்டுக் கொல்லப்படவில்லை.  பிரதமர் மோடி இலங்கை செல்வதால் இருதரப்பு மீனவர்களிடையேயான பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் எல்லை தாண்டினால் சுடுவோம் என்று பேட்டியளித்தது குறித்து ரணிலிடம் நீண்ட நேரம் பேசினேன். தமிழக மீனவர்கள் குறித்து தாம் அவ்வாறு கூறியிருக்கக் கூடாது என என்னிடம் ரணில் வருத்தம் தெரிவித்தார்  என்று சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்.

No comments

Powered by Blogger.