சுதந்திரக் கட்சி சந்திரிகாவின் கட்டுப்பாட்டிலா..?
-நஜீப் பின் கபூர்-
மைத்திரிபால சிரிசேன ஜனாதிபதியாக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதிக்கம் மெல்ல மெல்ல கைநழுவிப்போய் கொண்டிருப்பதைத் தற்போது அவதானிக்க முடிகின்றது. என்றாலும் அவரது விசுவாசிகள் சிலர் இன்னும் அவரை கட்சியில் முக்கிய பதவிக்கு அமர்த்துவதற்கு முயன்று கொண்டிருக்கின்றார்கள்.
இந்தப் பின்னணியில் தற்போது சுதந்திரக் கட்சி கொள்கை மற்றும் திட்டமிடல் குழுவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்ஹ நியமிக்கப்பட்டிருக்கின்றார். இந்தக் குழுவின் செயலாளராக சர்ச்சைக்குரிய அரசியல்வாதியாக இருக்கும் முன்னாள் பிரதமர் ரத்னசிரி விக்கிரம நாயக்காவின் மகன் விதுர விக்கிரமநாயக்க நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
எனவே கொள்கைகளை வகுக்கும் போது ராஜபக்ஷக்களை ஓரம் கட்டிவிட்டு சந்திரிகா ஆதிக்கத்தைக் கைப்பற்ற முனையக்கூடும். என்றாலும் இதனை கட்சியிலுள்ள ராஜபக்ஷ விசுவாசிகள் எவ்வளவு தூரம் ஏற்றுக் கொள்வார்கள் என்று தெரியவில்லை.

Post a Comment