Header Ads



முதலை பனிஸில் முதலை இல்லை, அதேபோன்று மகிந்த கூட்டத்திற்கு மகிந்த இல்லை...!

திருடர்களுடன் ஆடுகள் பகுதி 01 சமீபத்தில் நுகேகொடையிலும், பகுதி 02 கண்டியிலும் இடம்பெற்றதாக சமூக சேவைகள் மற்றும் நலன்புரி அமைச்சர் பி.ஹரிஸன் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பேரணியியை நடத்தியவர்களின் ராசி போன்றே ஒவ்வொரு பேரணிக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொள்ளவில்லை.

ஒரு பேச்சுக்கு சொல்வார்கள் கல் பனிஸில் கல் இல்லை, முதலை பனிஸில் முதலை இல்லை, மீன் பனிஸில் மீன் இல்லை என்று அதேபோன்று தான் மகிந்தவிற்கு சார்பான கூட்டத்திற்கு மகிந்த இல்லை.

நாட்டை திருத்த முன் விமல் அவரின் மனைவியை திருத்த வேண்டும் என நான் கூறுகின்றேன். மனைவியை கண்டிக்காமல் நாட்டை சீர்ப்படுத்த முற்பட்டால் அனைத்தும் தலைகீழாக மாறிவிடும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விமல் பழைய பெருமைகளை பேசிக்கொண்டு மக்களை முட்டாளாக்க முடியாது என சமூக சேவைகள் மற்றும் நலன்புரி அமைச்சர் பி.ஹரிஸன் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.