இளம்மாதர் முஸ்லிம் சங்கத்தினால் இளம்விதவைப் பெண்ணுக்கு தையல்மெஷின் அன்பளிப்பு
-நூருல் அயின் நஜ்முல் ஹுசைன்-
இளம்மாதர் முஸ்லிம் சங்கம் சுயவேலை வாய்ப்பில் ஈடுபடும் விதவைகளுக்கு பல்வேறு வாழ்வாதார உதவிகளைச் செய்துவருகின்றது. இதனடிப்படையில் கொழும்பு கிரேண்பாஸைச் சேர்ந்த இளம்விதவைப் பெண் ஒருவருக்கு தையல்மெஷின் ஒன்றை வழங்கி வைத்தது. தெமட்டகொடை வை.எம்.எம்.ஏ. இயக்க தலைமையகத்தில் இளம்மாதர் முஸ்லிம் சங்க தலைவி தேசமான்ய ஹாஜியானி மக்கியா முசம்மில் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வின்போது கலாநிதி அல்ஹாஜ் எஸ்.ஹரீஸ்தீன் அவர்களால் இளம்மாதர் முஸ்லிம் சங்கத்துக்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட மேற்படி தையல் மெஷினை கலாநிதி அல்ஹாஜ் எஸ்.ஹரீஸ்தீன் சார்பில் அல்ஹாஜ் அப்துல்லாஹ்கான் குறித்த பெண்மணியிடம் கையளிப்பதை படத்தில் காணலாம். இளம்மாதர் முஸ்லிம் சங்கத்தின் செயலாளரான தேசமான்ய ஹாஜியானி மர்ளியா சித்தீக், பொருளாளரான தேசமான்ய ஹாஜியானி பவாஸா தாஹா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Post a Comment