Header Ads



ஆப்பிள் டிவி அதிரடி விலை குறைப்பு - 70 கோடி ஐபோன்கள் விற்பனை,

உலகக் கோப்பைக்கு அடுத்து உலகமே உற்சாகமாக பார்த்து வரும் ஆப்பிள் ’ஸ்ப்ரிங் பார்வேர்ட்’ விழாவில் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் ஆப்பிள் டிவியின் விலை 69 டாலராக குறைத்திருப்பதாக அதிரடியாக, அறிவித்தார். மேலும் இன்று வரை 2.5 கோடி ஆப்பிள் டிவிக்கள் விற்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஆப்பிள் டிவிக்களில் ’எச்பிஓ நவ்’ -ன் எக்ஸ்க்ளுசிவ் டிவி சேனல் வசதியை மாதம் 14.99 டாலர் செலுத்தி, அடுத்த மாதம் முதல் பெற்றுக் கொள்ளலாமென்றும், முதல் மாதம் ’கேம் ஆப் த்ரோன்ஸ்’ ப்ரீமியர் ஒளிபரப்பு இலவசமென்றும் சற்று முன் எச்பிஓ தலைமை செயல் அதிகாரி ரிச்சர்ட் அறிவித்தார். 

அடுத்து மேடையேறிய குக், இதுவரை உலகமெங்கும் 70 கோடி ஐபோன்கள் விற்கப்பட்டுள்ளதாகவும் ஸ்மார்ட்போன் சந்தை 26 சதவீதம் வளர்ச்சியடைந்த நிலையில் ஆப்பிளின் வளர்ச்சி 49 சதவீதம் என்ற அளவிற்கு, ஸ்மார்ட்போன் சந்தையைவிட இருமடங்கு அதிகரித்திருப்பதாக அறிவித்து ஐபோன் வாடிக்கையாளர்களை பெருமிதப்படுத்தினார்.

1 comment:

  1. அப்பிளின் ஐ போனுக்கு இணை ஐ போனேதான், சாம்சுங் எப்பவும் சாம்சுங்தான், அப்பிளை எட்டிப் பிடிப்பது கடினம்.

    ReplyDelete

Powered by Blogger.