Header Ads



பிரதமர் ஷேக் ஹசீனா உயிர் தப்பினார்

வங்கதேச தலைநகர் டாக்காவில் நேற்று குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்ட நிலையில், அந்நாட்டுப் பிரதமர் ஷேக் ஹசீனா நூலிழையில் உயிர் தப்பினார்.

நேற்று மாலை தலைநகர் டாக்காவில் ஆளும் அவாமி லீக் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தில் பேச பிரதமர் ஷேக் ஹசினா தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, டாக்கா நகரின் முக்கிய சந்தைப் பகுதியான கர்வான் பஜாரில் நேற்று குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது.

அந்த இடத்தை ஷேக் ஹசீனாவின் வாகனம் கடந்து சென்ற சிறிது நேரத்தில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. அதில் காவல்துறை அதிகாரிக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

வங்க தேச நாடாளுமன்றத் தேர்தலில் முறைகேடு நடந்ததாகவும், அதனால்தான் ஷேக் ஹசினாவின் கட்சி வெற்றி பெற்றதாகவும் உடனடியாக மறுதேர்தல் நடத்தக் கோரி கடந்த ஜனவரி மாதம் முதல் அந்நாட்டு எதிர்க்கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. போராட்டத்தில் பொது வாகனங்களை தீ வைத்து எரித்தும், பயணிகள் மற்றும் ஆளும்கட்சியினர் மீது தாக்குதல் போன்ற சம்பவங்கள் நடத்தப்பட்டு வருகின்றன இந்த மோசமான வன்முறை போராட்டங்களில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

1 comment:

  1. நாத்திக.கொள்கையுடையவள் இந்த ஹசினா

    ReplyDelete

Powered by Blogger.