எகிப்தில் முஹம்மது முர்ஸியின், ஆதரவாளர் தூக்கிலிடப்பட்டார்
எகிப்தில் அதிபராக இருந்த முகமது மோர்சி கடந்த 2013–ம் ஆண்டில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சகோதர கட்சியினர் போராட்டம் மற்றும் கலவரத்தில் ஈடுபட்டனர். அதில் பலர் கொல்லப்பட்டனர்.
அது தொடர்பான வழக்கில் மோர்சி ஆதரவாளர்கள் நூற்றுக் கணக்கானவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு ஐ.நா.சபை கண்டனம் தெரிவித்தது.
தண்டனையை எதிர்த்து கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மோர்சியின் ஆதரவாளர் முகமது ரமடான் என்பவர் நேற்று காலை 7 மணியளவில் தூக்கிலிடப்பட்டார்.
கலவரத்தின்போது அலெக்சாண்ட்ரா நகரில் மாடியில் இருந்து 3 இளைஞர்களை தூக்கி வீசி ரமடான் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
அந்த தண்டனை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மோர்சி ஆதரவாளர்களில் இவர் முதலாவது நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment