Header Ads



இந்த புதிய அரசாங்கம் தொடர்பாக, நாட்டு மக்களுக்கு அனுபவம் இல்லை - பிரதமர் ரணில்

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்ட முதலாவது தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்வு நேற்றிரவு ஹிரு தொலைக்காட்சி ஊடாக ஒளிபரப்பப்பட்டது.

நாடும், அதன் எதிர்காலமும் என்ற தலைப்புடன் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. குறித்த நேர்காணலில் கலந்து கொண்ட பிரதமர், சமகால அரசியல் மற்றும் சமூக நிலவரங்கள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தார்.

இந்த புதிய அரசாங்கம் தொடர்பாக நாட்டுமக்களுக்கு அனுபவம் இல்லை. ஜனாதிபதி ஒருகட்சி, பிரதமர் பிறிதொரு கட்சி என்ற நிலை உள்ளது.

புதிய நிலை தொடர்பாக ஜனாதிபதியும், நீங்களும் விளக்கமளித்திருந்தீர்கள், ஆனால் ஆரம்ப நிலையில் உள்ள அரசியல் நிலைமைகளை எவ்வாறு சாதகமாக்கிக் கொள்ள முடியும்?

100 நாள் வேலைத்திட்டத்தில் எவ்வாறானா வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது, அவற்றை வெற்றியடையச் செய்வது என்பது தொடர்பாக கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தற்போது அந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்கக் கூடிய சாதக நிலை உள்ளது.

கடந்த 30 நாட்களில் புதிய முறையில் அபிவிருத்திகளை மேற்கொண்டோம்.

அனைத்து அரசியல் தரப்பினரையும் இணைத்துக்கொண்டு எவ்வாறு மேம்படுத்தல்களை முன்னெடுக்க முடியும் என ஆராய்ந்து வருகிறோம்.

அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றுதல், ஊழல் மோசடிகள் தொடர்பாக ஆராய்வதற்கான பொறிமுறையை தயாரித்தல், உள்ளிட்ட 100 விடயங்கள் உள்ளன.

No comments

Powered by Blogger.